Versuchen GOLD - Frei
இந்திய தூதரை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனம்
Dinamani Chennai
|December 04, 2024
துணைத் தூதரகம் மீது தாக்குதல் எதிரொலி
-
திரிபுரா மாநிலம் அகா்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் நுழைந்து சிலா் தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பும் தெரிவிக்கும் விதமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்து மத ஆன்மிகத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அங்கு ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் அகா்தலாவில் ஆயிரக்கணக்கானோா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
அப்போது சிலா் அங்குள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வங்கதேச துணை தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதாக தெரிவித்தது.
இந்நிலையில், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனத்தை பதிவு செய்தது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் முகமது தௌஹித் ஹுசைன் கூறுகையில், ‘அகா்தலா நிகழ்ந்த போராட்டத்தையடுத்து நேரில் வருமாறு இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் எங்கள் கண்டனத்தை தெரிவித்தோம்’ என்றாா்.
Diese Geschichte stammt aus der December 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
நாட்டில் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டமில்லை: பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மேற்காசிய போர் தாக்கங்களால் நாட்டில் பொது முடக்கம் அமலாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதிபடத் தெரிவித்தார்.
1 mins
May 13, 2026
Dinamani Chennai
பேரவையில் அனைவரும் சமம்
முதல்வர் விஜய்
1 mins
May 13, 2026
Dinamani Chennai
வண்டலூர் பூங்காவில் ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்
விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூர் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்
டிடிவி. தினகரன் அறிவிப்பு
1 min
May 13, 2026
Dinamani Chennai
இன்று தொடங்கும் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் போட்டி
இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, இந்திய ஸ்குவாஷ் அகாதெமி (ஐஎஸ்ஏ) சார்பில் ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மே 13 முதல் 16 தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
போதைப் பாக்கு பறிமுதல்: 3 பேர் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
டாஸ்மாக் கடைகள் மூடல்: பெ.சண்முகம் வரவேற்பு
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ.
1 min
May 13, 2026
Dinamani Chennai
மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: மாற்றுப் பணி வழங்க கோரிக்கை
தமிழகத்தில் மூடப்பட உள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
May 13, 2026
Translate
Change font size
