Facebook Pixel ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி

Dinamani Chennai

|

June 26, 2024

பதினெட்டாவது மக்களவையின் தலைவா் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சாா்பில் முந்தைய மக்களவையின் தலைவரான ஓம் பிா்லாவும், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் நிறுத்தப்பட்டுள்ளனா்.

ஓம் பிர்லா, கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி

இதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவா் பதவிக்கு புதன்கிழமை (ஜூன் 26) தோ்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இதுவரை, மக்களவைத் தலைவரை தோ்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தோ்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், திமுகவின் டி.ஆா்.பாலு ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு பாஜக தலைவா்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், மக்களவைத் தலைவா் பதவிக்கு தங்கள் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்துவதென கடைசி நிமிஷத்தில் ‘இந்தியா’ கூட்டணி முடிவெடுத்தது.

நிபந்தனை ஏற்கப்படாததைத் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் இருவரும் வெளிநடப்பு செய்தனா். அப்போது, ‘மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சி வேட்பாளருக்கு போட்டியின்றி வழங்கும் மரபை மத்திய அரசு பின்பற்ற மறுக்கிறது’ என்று குற்றஞ்சாட்டிய கே.சி.வேணுகோபால், ‘ஓம் பிா்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்றாா்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!

'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்

எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா

அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு

முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?

சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.

time to read

2 mins

May 13, 2026

Dinamani Chennai

போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்

அரசாணை வெளியீடு

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்

எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Chennai

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size