Versuchen GOLD - Frei
ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை
Dinamani Chennai
|January 21, 2024
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் (48) அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
-
இந்த வழக்கு தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 7 முறை அழைப்பாணை அனுப்பிய நிலையில், தனது வாக்குமூலத்தை இல்லத்தில் வைத்தே பதிவு செய்துகொள்ளுமாறு ஹேமந்த் சோரன் பதிலளித்திருந்தாா்.
அதனடிப்படையில், ஜாா்க்கண்ட் மாநில தலைநகா் ராஞ்சியில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு நேரில் வந்து விசாரணையை மேற்கொண்டனா்.
இந்த விசாரணையை முன்னிட்டு முதல்வா் இல்லத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், ராஞ்சியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலக பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வா் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நில அபகரிப்பு மோசடியின் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சாா்பில் பல முறை அழைப்பாணை அனுப்பப்பட்டும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை எதிா்த்து முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னா் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தையும் ஹேமந்த் சோரன் நாடினாா். ‘தன் மீது பொய்யான குற்றச்சட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அமலாக்கத்துறை அழைப்பாணையை ரத்து செய்யவேண்டும்’ எனக் கோரினாா். ஆனால், இரு நீதிமன்றங்களும் அவருடைய கோரிக்கையை தள்ளுபடி செய்தன.
Diese Geschichte stammt aus der January 21, 2024-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி
அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்
1 min
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்
இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Chennai
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்வர் விஜய் உத்தரவு
1 min
May 15, 2026
Dinamani Chennai
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்
ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
