Versuchen GOLD - Frei
நூலாயுதமே நமக்கு வேலாயுதம்!
Dinamani Chennai
|December 01, 2023
புத்தகம்தான் ஒருவனை வித்தகனாக்கும். நூலறிவுதான் ஒருவனுக்கு மேம்பட்ட அறிவைக் கொடுத்து அவனை வாலறிவனாக மாற்றும்.
-
அதனால் வாசிக்கும் பழக்கத்தை ஒருவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாசிப்பை நேசிப்பவன்தான் வையத்தில் மேல்நிலைக்கு வருவான்.
உணவின் சத்துகள் நம் ரத்தத்தில்தான் கலக்கும். புத்தகத்தின் சத்துக்கள்தான் நம் சித்தத்தில் கலந்து சிந்தனையைத் தெளிவாக்கும்.
புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்களைப் பலர் வாங்கிச் செல்கின்றனர். அவ்வளவு புத்தகங்களையும் அவர்கள் படிக்கிறார்களா அல்லது புத்தக அலமாரியில் அடுக்கி வைக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்த பிரபலமான ஒருவர் வீட்டில் பல வகையான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "இவ்வளவு புத்தகங்களையும் படித்தீர்களா' என்று நான் கேட்டபோது, "இவற்றையெல்லாம் படிக்க நேரம் எங்கே இருக்கிறது? ஏதோ ஒன்றிரண்டைப் படிப்பேன். புத்தகத்தை வாங்கிச் சேர்த்து வைப்பதில் எனக்கு ஆவல் அதிகம்' என்று கூறினார். அவர் போல் ஒருசிலர் இருக்கலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
அந்த நாளில் தமிழ்நாட்டிலேயே நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்திப் புத்தகம் படித்தவர்களில் அறிஞர் அண்ணாவும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
கன்னிமாரா நூலகத்தையே கரைத்துக் குடித்தவர் அண்ணா. அங்கு தேடிக் கிடைக்காத ஒரு நூல் திருவல்லிக்கேணி சிங்காரவேலர் மாளிகையில் உள்ள நூலகத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு போய்த் தேடி எடுத்து அதைப் படித்தார். இதை அண்ணாவே சொல்லியிருக்கிறார். அதைப்போல பட்டுக்கோட்டை அழகிரிசாமியும் அவ்வப்போது அங்கு சென்று நூல்களை எடுத்துப் படித்திருக்கிறார்.
அண்ணா அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது அறுவைச் சிகிச்சைக்கு நேரமாகிவிட்டது வாருங்கள் என்று டாக்டர் மில்லர் அழைத்தபோது, கொஞ்சம் பொறுங்கள், இன்னும் அரை மணி நேரத்தில் இதைப் படித்து முடித்து விடுவேன். அதன் பின்னர் அறுவைச் சிகிச்சையை வைத்துக் கொள்ளலாம் என்றார் அண்ணா.
Diese Geschichte stammt aus der December 01, 2023-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!
“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.
2 mins
May 17, 2026
Dinamani Chennai
காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
1 min
May 17, 2026
Dinamani Chennai
ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
முஸ்லிம் வாரியம்
1 min
May 17, 2026
Dinamani Chennai
லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 17, 2026
Dinamani Chennai
எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா
1 min
May 17, 2026
Dinamani Chennai
அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்
சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
May 17, 2026
Dinamani Chennai
எலும்பு உறுதி பெற...
“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.
3 mins
May 17, 2026
Dinamani Chennai
முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை
1 min
May 17, 2026
Translate
Change font size
