Versuchen GOLD - Frei
அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடியை ஓரங்கட்ட திட்டம்?
Dinakaran Trichy
|December 04, 2025
உடனே வரும்படி அமித்ஷா அழைத்ததால், ரகசிய மாக டெல்லி சென்ற ஓ. பன்னீர்செல் வம், அங்கு உள்துறை அமைச்சரின் வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு புதிய வரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன. இதனால் அடுத்த வாரம் சென்னைவரும் அமித்ஷா, இது குறித்து பஞ்சாயத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக வலு வான கூட்டணியை அமைத்துள்ளது. ஆளும் கட்சிக்கு மக்களிடம் செல் வாக்கும், நல்ல பெயரும் உள்ள தால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து அலைபாய்ந்து வருகிறது. இதனால், அதிமுக தலை மையில் புதிய கூட்டணி அமைப்ப தற்கான முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமித் ஷா இந்த வார இறுதி அல்லது 2வது வாரத்தில் சென்னைக்கு வருகிறார்.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பாமக, தேமுதிக போன்ற கட் சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட உள்ளார். லோக்சபா தேர்த லுக்கு முன்பு அதிமுக தேசிய ஜன நாயக கூட்டணியிலிருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மீண்டும் இரு கட்சிகளும் முன்பு எப்போதும் இல் லாத வகையில் நெருக்கம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அமித் ஷா சென்னை வந்து அதிமுக தலைவர்களை சந்தித்தார். அப் போது கூட்டணி பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருவதால், அதிமுக மற்றும் பாஜ தலைமையிடையேயான முக் கிய பேச்சுவார்த்தை டெல்லியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அதிமுக தலைவர் ஒருவர் கூறுகையில், “பாஜ மற்றும் அதிமுக உயர்மட்ட தலைவர்கள் டெல்லியில் சந்திக்க உள்ளனர். கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும், இடங் கள் எப்படி பங்கிடப்பட வேண்டும் என அனைத்து விஷயங்களும் பேசப்படும். அடுத்த 10 நாட்களுக் குள் முடிவு எட்டப்படும்” என்றார்.
Diese Geschichte stammt aus der December 04, 2025-Ausgabe von Dinakaran Trichy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Trichy
Dinakaran Trichy
வெனிசுலா வீழ்ந்த கதை!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுத்து மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரசை கைது செய்து நாடு கடத்தி உள்ளார்.
3 mins
January 11, 2026
Dinakaran Trichy
இளையோர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்திய சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
1 min
January 11, 2026
Dinakaran Trichy
'பராசக்தி' படம் வெளியானது தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, பசில் ஜோசப், ராணா டகுபதி, சேத்தன், பிரகாஷ் பெலவாடி, குரு சோமசுந்தரம், சந்தியா மிருதுள், குலப்புள்ளி லீலா நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம், 'பராசக்தி'.
1 min
January 11, 2026
Dinakaran Trichy
ராஜஸ்தான் மதிய உணவு திட்டத்தில் ரூ.2000 கோடி ஊழல்
அமலாக்கத்துறை விரைவில் விசாரணை
1 min
January 11, 2026
Dinakaran Trichy
வங்கதேசத்தை தொடர்ந்து பாகிஸ்தானிலும் இந்து இளைஞர் படுகொலை
சிந்து மாகாணத்தில் மக்கள் போராட்டம்
1 min
January 11, 2026
Dinakaran Trichy
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
மலேசிய ஓபன் பேட்மிண்டன்
1 min
January 11, 2026
Dinakaran Trichy
வழக்கமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களுடைய பயன்பாட்டுக்கு திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஒவ்வொரு நாளும் பம்பரம் போல சுழன்று வருகிறார்.
1 mins
January 11, 2026
Dinakaran Trichy
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாட்டம்
8,456 பேருக்கு பரிசுத்தொகுப்புகளை வழங்கினார்
1 min
January 11, 2026
Dinakaran Trichy
ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது... முதல் பக்க தொடர்ச்சி
வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
2 mins
January 11, 2026
Dinakaran Trichy
டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவு
குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா, மது ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
1 min
January 11, 2026
Listen
Translate
Change font size
