Facebook Pixel நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்... | Dinakaran Nagercoil – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்...

Dinakaran Nagercoil

|

October 12, 2025

அன்புள்ள டாக்டர், நான் ஒரு முப்பத்தைந்து வயது ஆண். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு நண்பன் இருந்தான். என்னோடு படித்தவன். கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். கல்லூரி முடித்த பின்பும் ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சென்றோம். நான் தான் அவனை அந்நிறுவனத்தில் சேர்த்துவிட்டேன். அந்நாட்களில் என் நண்பன் மீது எனக்கு அளவு கடந்த காதல் இருந்தது. ஆம். காதல்தான். நான் அவனை அப்படி நேசித்தேன். நாங்கள் இருவரும் பள்ளி நாட்களிலேயே ஓரினப்புணர்ச்சியாளர்கள்தான். அது எங்களுக்குள் மட்டுமே இருக்கும் பந்தமாக இருந்தது. மிக ரகசியமாக வைத்திருந்தோம். இந்நிலையில் எனக்கு திருமணமானது. மணமான புதிதில் என் மனைவியிடம் சற்று விலகியே இருந்தேன். அவள் என்னிடம் ஏன் எனத் திரும்ப திரும்ப கேட்டாள். நான் சரிவர பதில் சொல்லாமல் தட்டிக்கழித்தேன். அவள் என் நண்பனிடம் இதைப் பற்றி புலம்பியிருக்கிறாள். என் நண்பன் என்னிடம் இதை அவளிடம் சொல். நம் உறவை அவள் அறிய வேண்டும் என்றான். ஒரு கட்டத்தில் நான் எனக்கும் என் நண்பனுக்கும் இருக்கும் உறவைப் பற்றிச் சொன்னேன். அவள் அதிர்ச்சியடைந்தாள். எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் அப்படி இருக்காது என்று நினைத்தேன் என்று சொன்னாள். எங்கள் உறவை அவள் கைவிடச் சொன்னாள். ஆனால், என்னால் முடியவில்லை. சில மாதங்கள் நானும் என் நண்பனும் பார்க்காமல் இருந்தோம். ஆனால், நான் அவனைப் போய் பார்த்து மீண்டும் இணைந்தேன். எங்களால் பிரிய முடியாது என்று மனைவிக்குப் புரிந்தது. சரி என்று வேறு வழியின்றி அனுமதித்தாள். என் நண்பன் என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வருவான். என் மனைவியோடு நன்கு பழகுவான். இந்நிலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. ஒருநாள் நான் வெளியூருக்குப் போய்விட்டு சற்று முன்பாகவே வீடு திரும்பிய போது என் மனைவியும் என் நண்பனும் தவறான கோலத்தில் இருப்பதைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் ஏன் சொல்ல வில்லை என்று கேட்டேன். இருவருமே குற்றவுணர்ச்சியில் தவித்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்கள் உறவு மூவர் உறவாய் மாறியது. நாளாக நாளாக என் மனைவி என் நண்பனிடம் நெருங்கத் தொடங்கினாள். அவளுக்கு என்னை விடவும் என் நண்பனையே பிடிக்கத் தொடங்கியது. கொரோனா நேரத்தில் அவனோடேயே அதிகமும் இருந்தாள். நான் அந்த வீட்டில் ஒரு டம்மி போல் இருந்தேன். இதனால் கர்ப்பம் வந்தது. எனக்கு என் நண்பனிடமும் மனைவியிடமும் அடிக்கடி சண்டை கட்டினேன். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு நான் வெளியேறினேன். ஒருநாள் வீட்டுக்குப் போய் குழந்தையை என்னோடு அழைத்துக் கொண்டு வர முயன்றேன். அப்போது அவனும் இருந்தான். இருவரும் என்னிடம் கடுமையாக சண்டையிட்டு விரட்டிவிட்டார்கள். என் நண்பனும் மனைவியும்தான் அவ்வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கோ என்னோடு வாழ்வதை விடவும் அவர்கள் சேர்ந்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. நான் இதை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்யட்டும் மேடம்.

நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்...

பதில்: நீங்கள் ஒரு இக்கட்டான சூழலில்தான் இருக்கிறீர்கள். உங்களால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பிரிந்து போய்விடலாம் என்ற எண்ணம் இருந்தால், பிரிந்து சென்று உங்களுக்கென்று வேறு ஓர் வாழ்க்கையை தேடிக் கொள்வது நல்லது. அப்படியில்லாமல், உங்களால் அவர்களை பிரிய முடியவில்லை என்றால் உங்கள் மனைவி மற்றும் நண்பன் இருவரது உறவுமே வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர்களிடம் நீங்கள் சமாதானமாக

WEITERE GESCHICHTEN VON Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size