Facebook Pixel 2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் | DINACHEITHI - DHARMAPURI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

DINACHEITHI - DHARMAPURI

|

May 29, 2025

சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் "அலைகள்" திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.05.2025) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை

மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்

25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 mins

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - DHARMAPURI

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

time to read

1 mins

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.

முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்

time to read

1 min

February 23, 2026

DINACHEITHI - DHARMAPURI

இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்

டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

time to read

1 min

February 22, 2026

Translate

Share

-
+

Change font size