Versuchen GOLD - Frei
விவசாயிகளுக்கு வஞ்சனை!
Nakkheeran
|May 02-05, 2026
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
முன்பெல்லாம் விளைந்த நெல்லை அறுவடை செய்து களத்து மேட்டுக்கு கொண்டுவந்து அடித்து பதர் நீக்கி நெல்லை சேமிப்பதற்கு ஒரு வாரம்கூட ஆகும். நெல் அறுவடை இயந்திரங்கள் பெருமளவு வந்துவிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு ஏக்கர் நெல்லை அறுவடை செய்து விடுகிறார்கள். இப்படி அறுவடை செய்ததை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து, காத்திருந்து எடை போட்டு எடுக்கும் வரை விவசாயிகள் படும் வேதனை சொல்லி மாளாது. காரணம், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல் 15 நாள், 20 நாள், 30 நாட்களென கொள்முதலுக்காக காத்திருக்கும் நிலை. மழை பெய்துவிட்டாலோ மழையில் நனைந்து நெல் முளைத்துவிடுகிறது!
இது மட்டுமல்ல, புதிய ஊர்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அதிகாரிகளிடம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள செங்கமேடு கிராமத்தில் ஏற்கனவே இயங்கிவந்த நெல் கொள்முதல் நிலையத்தை தொடர்ந்து இந்த ஆண்டும் செயல்படுத்தக்கோரி, ஊர் முக்கியஸ்தர் சிகாமணி என்பவர் மாவட்ட ஆட்சியர், நுகர்வோர் வாணிபக்கழக மண்டல மேலாளர், கோட்ட மேலாளர், இப்படி பலருக்கும் மனு கொடுத்தும் 20 நாட்களாக கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. சென்னையிலுள்ள நுகர்வோர் வாணிபக் கழக இயக்குனர் வரை புகார் கொண்டுபோன பிறகு கொள்முதல் நிலையத்தை திறந்தார்கள். விவசாயி விளைய வைத்த நெல்லை விலைக்குக் கொடுப்பதற்கு தினம் தினம் செத்து செத்துப் பிழைக்க வேண்டியுள்ளது” என்கிறார் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி.
Diese Geschichte stammt aus der May 02-05, 2026-Ausgabe von Nakkheeran.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Nakkheeran
Nakkheeran
கூட்டணியில் கலகம்! ரெடியாகும் காங்கிரஸ்!
\"ஹலோ தலைவரே, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை கவனிச்சீங்களா? \" \"கவனிக்காமல் இருப்பேனா? பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தி.மு.க.தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கே.\"
3 mins
May 02-05, 2026
Nakkheeran
திராவிட மாடல் 2.0 Exit Poll ரிசல்ட்!
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் முடிந்ததையொட்டி, இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் நடந்த தேர்தலுக்கான எக்ஸிட் போல் எனும் வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி மாலையில் வெளியாகியது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பெரும் பலம்!
ராம்சரண் நடித்துவரும் 'பெத்தி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட அதிக நாட்கள் நடந்துவருகிறது.
1 mins
May 02-05, 2026
Nakkheeran
விவசாயிகளுக்கு வஞ்சனை!
விவசாயிகள் நெல் உற்பத்தி செய்வதைவிட விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.
3 mins
May 02-05, 2026
Nakkheeran
இலங்கை மீனவரை சிறைபிடித்த தமிழக மீனவர்கள்!
தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்களில் ஒருவரை சுற்றிவளைத்துப் பிடித்த தமிழக மீனவர்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்திருப்பது சந்தோசத்தையும், கலக்கத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
வார் ரூம்
(25) அப்போது தளபதி... இப்போது எதிரி!
3 mins
May 02-05, 2026
Nakkheeran
சீட் தேறுமா? விஜய் யாகம்!
2026 சட்டமன்றத் தேர்தலின் புதுவரவான த.வெ.க. தலைவர் விஜய்தான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக்! தற்போது தேர்தல் முடிந்த நிலையில், தனது அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டுமென்றும், எதிரிகளின் சூழ்ச்சி தன்னை பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், மிகவும் பிரபலமான ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்று, தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
பழிக்குப்பழி..! தஞ்சை பயங்கரம்!
தன் மகளைக் கொன்றவனைக் காத்திருந்து பழிதீர்த்த தந்தையின் செயல் தஞ்சாவூர் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
கூவாகம் திருவிழா! குறைதீர்க்குமா அரசு நிர்வாகம்?
ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாக கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு திருநங்கைகள் திருமணம், அரவான் களப்பலி ஆகிய திருவிழா மூன்று நாட்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
2 mins
May 02-05, 2026
Nakkheeran
தீவிரமயமாக்கல்: கண்காணிப்பு தளர்ந்தால் என்ன நடக்கும்?
முக்கிய வழக்குகளில் சிறைக்கு வரும் குற்றவாளிகள், சாதி, மதம், இனம், பணம், மொழி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தி, சிறைப் பணியாளர்களையும், சிறைவாசிகளையும் மெதுவாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறார்கள்.
3 mins
May 02-05, 2026
Listen
Translate
Change font size
