“உண்மையான நட்புக்கு புரிதல் ரொம்பவே அவசியம். சில சமயம் நாம் கோவமா இருப்போம். நாம ஏன் கோவமா இருக்கோம்னு புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர் தான் உண்மையான தோழின்னு நான் சொல் வேன். எந்த உறவிலும் எதிர் பார்ப்புகள் அதிகம் இருக்கும்.
நட்பு என்ற உறவிலும் ஒருத் தர் மேல் மற்றொருவருக்கு எதிர்பார்ப்பு இருக்கும். அதை புரிந்து கொள்வதும் நட்பு தான். என்னைப் பொறுத்த வரை நட்பிற்கு எல்லைகள் என்று வரைமுறை படுத்த முடியாது" என்கிறார் சன் டி.வியில் டாப் ரேட்டிங்கில் உள்ள கயல் தொடரின் நாயகி சைத்ரா ரெட்டி.
"கர்நாடகாவில் உள்ள சிறிய கிராமத்தில் தான் நான் பிறந்தேன். என்னுடைய அம்மாவின் அம்மா ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. அவங்கதான் என் அம்மாவிற்கு பிரசவம் பார்த்தாங்க. நானும் அக்காவும் வீட்டில்தான் பிறந்தோம். அதன் பிறகு நான் படிச்சது எல்லாம் பெங்களூரில். எங்களுடையது ரொம்ப சாதாரணமான குடும்பம். அப்பா என்னையும் அக்காவையும் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் வளர்த்தார். அப்பா ஆரம்பத்தில் சின்னதா தையல் கடை வச்சிருந்தார். சில காலம் கழித்து அதை பொட்டிக்கா மாற்றி அமைத்தார். இப்ப வரைக்கும் அப்பா அதை நிர்வகித்து வருகிறார். நான் படிச்சது எல்லாம் பெங்களூரில்தான்.
அப்ப எனக்கு 19 வயசு இருக்கும். பெங் களூரில் உள்ள நேஷனல் கல்லூரியில் படிச்சிட்டு இருந்தேன். கல்லூரியில் நடை பெறும் எல்லா கலை நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வேன். அப்படி நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியினை பார்த்து தான் எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் என்னை ஆடிஷனுக்கு வரச்சொன்னாங்க. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய உயரம். எனக்கு சின்னத்திரை பற்றி எதுவுமே தெரியாது. முதலில் எனக்கு அதில் விருப்பமே இல்லைன்னு தான் சொல்லணும். ஜாலியா படிச்சிட்டு ஃபிரண்ட்ஸ்சோட சுத்திட்டு இருந்தேன். திடீரென்று ஆடிஷனுக்கு வரச் சொன்ன போது... சரி போய் டிரை செய்யலாம்ன்னு தான் வந்தேன். அதன் பிறகு அவங்களிடம் இருந்து எந்த தகவலும் வரல. ஒரு மூணு மாசம் கழிச்சு, என்னை தேர்வு செய்துவிட்டதாகவும், கன்னடத்தில் சீரியல் ஒன்றில்லீட் ரோல்னு சொன்னாங்க. சரி, நடிச்சு பார்க்கலாமேன்னுதான் நான் நடிக்க சம்மதிச்சேன். அதன் பிறகு அதே சீரியல் தமிழில் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
هذه القصة مأخوذة من طبعة 1-15, May 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 1-15, May 2023 من Thozhi.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.