يحاول ذهب - حر
வர்த்தக நடவடிக்கைகளை VAT வரியிலிருந்து விலக்குதல்: ஒரு நிர்வாகப் பிழைக்கான திருத்தம்
September 04, 2025
|Virakesari Daily
இக்கட்டுரை, "பெறுமதி சேர் வரி" (VAT) மற்றும் அதற்கு முன்னோடியான "பொருட்கள் மற்றும் சேவைகள் வரி" (GST) ஆகியவற்றின் வலையிலிருந்து வர்த்தக (Trading) நடவடிக்கைகளை விலக்கி இருந்ததற்கான ஆரம்ப சட்ட நோக்கத்தை (Intention of the law) ஆராய்ந்து, வர்த்தகத்தை VAT வலையில் கொண்டுவந்ததற்கான தூரநோக்கற்ற கொள்கை மாற்றத்தை விமர்சிக்கிறது.
-
இத்தகைய நடவடிக்கை, சீரான வரிக் கொள்கைகளுக்கு முரணானதும், பொருளாதாரத்தின் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தியதும், நிர்வாக மற்றும் நிதி சார்ந்த பிழை என நிறுவி, அதனை எவ்வாறு வரி வருமானத்திற்கு பாதிப்பின்றி சீர்செய்யலாம் என விபரிக்கின்றது.
பெறுமதி சேர் வரி (VAT) தற்போது இறக்குமதிகளுக்கும், சில நிபந்தனைகளுடன் வர்த்தகமாக மேற்கொள்ளப்படும் பின்வரும் வியாபார நடவடிக்கைகளுக்கும் விதிக்கப்படுகிறது:
உற்பத்தி மற்றும் தயாரிப்பு (Manufacturing and production), சேவை வழங்கல் (Provision of service)
வர்த்தகம் (Trading). (உள்ளூர் மொத்த அல்லது சில்லறைச் சந்தையில் பொருட்களை வாங்கி, விற்பனை செய்தல் என வர்த்தகம் பொருள்கோடப்படுகிறது).
VAT பெயரளவில் 2002 ஆகஸ்ட் 01 முதல் அமுல்படுத்தப்பட்டாலும், அது 1998 முதல், அப்போது மக்கள் கூட்டணி (PA) அரசு விற்பனை புரள்வு வரியை (Turnover Tax) நீக்கி, GST என்ற பெயரில் அறிமுகப்படுத்தியதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. 2001இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. (UNP) அரசின் தேர்தல் வாக்குறுதியைத் தொடர்ந்து GSTஐ 2002ல் VAT ஆக மாற்றியது. இம்மாற்றம் வழமை போன்று மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. GST, VAT ஆகிய இரண்டு சட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவற்றின் அமைப்பும், செயற்பாட்டு முறைகளும் சுமாராக ஒரே மாதிரியானவை என்பதும், எனவே இது அடிப்படை நிதி சீர்திருத்தம் அல்ல, ஒரு பெயர் மாற்றம் மட்டுமே என்பதும் தெளிவாகிறது.
GST மற்றும் VAT இரண்டிலும் வர்த்தக நடவடிக்கைகளை விலக்கு அளித்தலானது நிதிக் கொள்கையின் விவேகமான முடிவு.
அரசியல் கட்சி முரண்பாடுகள், நிதிக் கொள்கை வகுப்பாளர்களின் வேறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியிலும், GST மற்றும் VAT சட்டங்களிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளை திட்டமிட்டு விலக்கியது இந்த வரி விலக்களித்தலின் முக்கியத்துவம், அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. வர்த்தக நடவடிக்கைகளுக்கு இத்தகைய வரி விதிக்கப்படுமானால், கடுமையான நடைமுறை சிக்கல்கள் மற்றும் பொருளாதாரச் சிதைவுகள் ஏற்படும் என்ற நியாயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய முடிவுதான் இது.
GST மற்றும் VAT சட்டங்களில் வர்த்தக நடவடிக்கைகளை விலக்கிய விதிகள், குறிப்பாக பிரிவு 3, சொல்லுக்குச் சொல் ஒரே மாதிரியாகவே இருந்தன.
هذه القصة من طبعة September 04, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
