يحاول ذهب - حر
தசாப்தங்களுக்கு பிறகு சிங்கள சிதைவுகள் சென்றடைகிற்து வருத்தம் தரும் ஒரு செய்தி
September 02, 2025
|Virakesari Daily
ஆறு மாதங்களாக அகழ்வாராய்ச்சியாளர்களும் தொல்லியல் நிபுணர்களும் வடஇலங்கையில் யாழ்ப்பாணத்தில் புதைகுழிகளிலிருந்து மனித எச்சங்களை கண்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் 200 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகளை அவர்கள் மீட்டிருக்கிறார்கள். அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும்.
அந்த மனிதப் புதைகுழிப் பகுதியும் அதிகரிக்கும் எண்ணிக்கையில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களும் நாட்டின் தமிழ் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்திருக்கின்ற அதேவேளை, நாட்டின் பிரதான போக்கு ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களின் கவனத்தை அந்த செய்திகள் பெரிதாகப் பெறவில்லை. சினந்தரும் இந்த இடைவெளியைக் கண்ட மூன்று இளம் ஊடகவியலாளர்கள் அந்த செய்தியை சிங்களத்தைப் பேசும் பெரும்பான்மைச் சமூகத்துக்கு கட்டாயம் சொல்லியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
அவர்கள் மூவரும் “செம்மணி" என்ற ஒரு சிங்கள நூலை எழுதுவதற்காக கடந்த சில மாதங்களாக வளங்களை திரட்டிக்கொண்டு (யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்கு பிறகு 1990களின் நடுப்பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் குடிமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதைகுழி பகுதிகளில் ஒன்றான) செம்மணிக்கு பல தடவைகள் சென்று வந்தார்கள்.
இளம் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தரிந்து ஜெயவர்தன, எம்.எவ்.எம்.பசீர், தரிந்து உடுவரகெதர ஆகியோரினால் எழுதப்பட்ட "செம்மணி" நூல் அண்மையில் கொழும்பில் தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இது தமிழர்களுக்கு எதிராக அரச படைகளால் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை உறுதியாக நிராகரிக்கின்ற சிங்கள வாசகர்கள் மத்தியில் கவலைதரும் அந்த போர்க்காலக் கதையை அம்பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான ஒரு முயற்சியாகும்.
போர் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கடந்தோடிவிட்ட நிலையில், இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டைகள் குறித்த எடுத்துரைப்புக்கள் வடக்கிலும் தெற்கிலும் மிகவும் முரணானவையாகவே இருந்து வருகின்றன. "பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய போர் நாயகர்களாக" தங்களது படை வீரர்களை மதிக்கும் சிங்களவர்கள், தமிழ்க் குடிமக்களின் மரணங்கள் பற்றிய செய்திகளை நிராகரிக்கிறார்கள்.
هذه القصة من طبعة September 02, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
