يحاول ذهب - حر
செம்மணியில் கண்டறியப்படும் சிறுவர்களின் எச்சங்களைப் புறக்கணிக்கப் போகிறீர்களா?
July 01, 2025
|Virakesari Daily
சட்டத்தரணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் கேள்வி
ஒருகாலத்தில் நீங்கள் யுத்த வீரர்கள் எனப் புகழாராம் சூட்டினீர்கள். ஆனால் அவர்கள் உண்மையில் என்ன செய்தார்கள் என்பது இப்போது வெளிப்படுகையில், நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள்?
செம்மணியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கண்டறியப்படும்போதும் நீங்கள் அதனைப் புறக்கணிக்கத்தான் போகிறீர்களா? அது உங்களின் பிள்ளையாக இருந்திருந்தால், நீங்கள் இதனைத்தான் செய்வீர்களா? என சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்தோடு 'இது வெறுமனே வரலாற்றுடன் தொடர்புடைய கேள்வி மாத்திரமன்று. மாறாக இது மனிதாபிமானத்துடன் தொடர்புடைய கேள்வியாகும். இவ்வேளையில் அமைதியாக இருப்பது என்பது நடுநிலைமை அல்ல. மாறாக அது குற்றத்துக்கு உடந்தையாக இருத்தலாகும்' எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
செம்மணி சித்துபாத்தியில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதை குழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்று முன்தினம் மதியம் வரையான காலப்பகுதியில் 33 மனித எலும்புக்கூட்டொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்தோடு இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் நீலநிறப்பை ஒன்றும், துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனையடுத்து செம்மணி நிலம் பேச ஆரம்பித்திருக்கும் மனிதப்பேரவலம் தொடர்பில் சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தமது சமூகவலைத்தளப்பக்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன்
அதன்படி இதுபற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், 'தமிழர்கள் ஒடுக்குமுறை பற்றிப் பேசிய போதெல்லாம் அவர்கள் அமைதிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றிப் பேசுவது என்பது கடந்தகால மீறல்களை ஆதரிப்பதாகப் பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் அதுவல்ல. மாறாக இதுகுறித்துப் பேசுவது என்பது நாம் கூறுவதைச் செவிமடுங்கள் என்ற கோரிக்கையையும், நீதிக்கான தேடலையும் உள்ளடக்கியதாகும்.
هذه القصة من طبعة July 01, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
