يحاول ذهب - حر
நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம்; எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்?
August 12, 2025
|Tamil Mirror
2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு 13 வருடங்களாக இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாதிருக்கின்ற நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றிய கருத்துக்கள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த வீட்டுத் திட்டத்திற்குப் பிறகு நிர்மாணிக்கப்பட்ட எத்தனையோ வீடமைப்புத் திட்டங்கள் பயனாளிகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்ட நிலையில், நுரைச்சோலை சவூதி வீட்டுத் திட்டம் மட்டும் இன்னும் காடாகிக் காட்சியளிக்கின்றது.
இப்படி ஆண்டுக்கொரு தடவை அதுபற்றி வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கப்படுகின்றதே தவிர ஆன பலன் ஒன்றுமில்லை.
இந்த விவகாரம் இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டு பின்னர் நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றம் இன விகிதாசாரத்தின் அடிப்படையில் வீடுகளைப் பகிர்ந்ததளிக்குமாறு தீர்ப்பளித்தது. ஆனால், இது நியாயமற்றது என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இதுவரை அவ்வீடுகள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
நீதிமன்றத் தீர்ப்பை நாம் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆயினும், அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முற்றுமுழுதாக முஸ்லிம்கள் வாழும் அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மாவட்ட இன விகிதாசாரத்தின் படி, பகிர்ந்தளிப்பதே தார்மீகம் என்ற கருத்துக்கள் முஸ்லிம்களால் முன்வைக்கப்படுகின்றன.
இந்த 500 வீடுகளும் இப்படி யாருக்கும் பயனற்றுக் கிடப்பதை விடவும் எல்லா சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் அது பகிர்ந்தளிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை என்று இப்போது பெரும்பாலானோர் கருதுகின்றனர். இருப்பினும், அது முஸ்லிம்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் என்பதால், 'பெரிய பங்கு' முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றே முஸ்லிம்கள் கோருகின்றனர். அது ஒருபுறம் இருக்க, இந்த வீட்டுத் திட்டத்தை போல நாட்டில் உள்ள அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தில் காணப்படும் அரச காணிகளையும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஏன் அரசாங்கங்கள் பிரித்துக் கொடுக்க முன்வரவில்லை என்ற முக்கியமான ஒரு கேள்வியையும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்து வருகின்றனர்.
هذه القصة من طبعة August 12, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

