يحاول ذهب - حر
அன்பின் அடையாளமாய் திகழ்பவளே அன்னை
May 12, 2025
|Tamil Mirror
அன்னை தான் இவ்வுலகில் நமக்குக் கிடைத்த பொக்கிஷம். "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" ஔவை பாட்டியார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் கூறியுள்ளார். இதன் பொருள் அன்னை தான் நம் முதல் கடவுள்.
-
அன்னையர்கள் பல விதமான கஷ்டங்களுக்கு இடையில் தம்மை வளர்த்து வருகிறார்கள். மேலும், பல விதமான சாதனைகளையும் படைத்து வருகிறார்கள்.
இத்தகைய போற்றுதற்குரிய அன்னையர்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும். அன்னையர் தினம் உலகின் பல பகுதிகளில் வெவேறு தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல நாடுகளில் மே மாதம் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்த காலகட்டமாக இருந்தாலும் சரி, நாம் எத்தனை மனிதர்களைச் சந்திருந்தாலும் சரி நம் மீது அம்மாவை விட வேற யாரும் அன்பு செலுத்த முடியாது. இந்த உலகில் யாருக்கு ஏதும் செய்தாலும் அதற்கு கைமாறாக இது செய்ய வேண்டும் என்ற கருத்து இருக்கிறது. ஏன் சொல்லப்போனால் கடவுளிடம் வரம் கேட்டால் கூட நான் உனக்கு இதைச் செய்கிறேன் என்று கூறி வரத்தைக் கேட்கிறோம். ஆனால், அம்மா என்பவள் எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் நம் மீது உண்மையான அன்பு செலுத்துபவள்.
இந்த நாளன்று உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்களைக் கூறுங்கள். இந்த நாள் மட்டுமில்லை எந்நாளும் அம்மாவை மறந்துவிடாதீர்கள்.
பெண்கள், வீட்டில் சகோதரியாக, தாரமாக, தோழியாக, பாட்டியாக இப்படி பல பாத்திரங்களில் நம்மை வழிநடத்திச் சென்றாலும், அன்னை என்ற பாத்திரமே மிக உன்னதமான பாத்திரமாகும். அன்னையினால் மட்டுமே ஒரு பிள்ளையின் அனைத்து உணர்வுகளையும், கஷ்டங்களையும் உணர முடியும்.
நாம் கருவில் இருக்கும்போதே கருவிலேயே பல சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சமூகத்திற்குப் பெறுமதி மிக்கவர்களாக நம்மைத் தருபவர்கள் அன்னையர்களே. எல்லா உறவுகளையும் ஒன்றிணைத்து தன்னலம் கருதாது எல்லா உறவுகளும் முக்கியம் என வாழும் பெண் தெய்வங்களே அன்னையர்கள் ஆவர்.
அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பின் காரணமாக அன்னையர் தினம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த உலகில் அன்னையின் அன்பிற்கும் பண்பிற்கும் வேறெதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது. கருவில் இருக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ என அறியாத போதிலும் தன் குழந்தையைப் பத்திரமாய் சுமந்து உலகின் அழகைப் பார்க்க வைக்கும் உன்னத உறவு தான் அன்னை தான். இவ்வுலகில் அன்னையைத் தவிர, வேறு யாராலும் அதீத அன்பைக் கொடுத்து விட முடியாது. அன்பின் அடையாளமாய் திகழ்பவளே அன்னை.
هذه القصة من طبعة May 12, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size

