يحاول ذهب - حر

திருவடிமேல் உரைத்த தமிழ்

December 21, 2025

|

Dinamani Dharmapuri

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் வீடுபேறு பெற விழைவோர் இறைவன் திருவடிகளைச் சிக்கெனப் பற்ற வேண்டும் என்கிறார்.

- முனைவர் ம.பெ. சீனிவாசன்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார். நிலமிசை நீடுவாழ் வார். (3)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. (4)

என்றும் பேசும் அவர், வாலறிவனான இறைவனது நன்மை பொருந்திய திருவடிகளை வணங்காவிட்டால் ஒருவன் கற்ற நூலறிவால் என்ன பயன் உண்டாம் என்றும் வினவுகின்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். (2) என்பது குறள். இதனை உணர்ந்தே,

தலையே நீவணங்காய்-தலை மாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்!

என்று அருளிச்செய்தார் திருநாவுக்கரசர். மணிவாசகரும் திருச்சதகத் தொடக்கத்தில் இறைவன் திருவடிகளை இறுகப் பற்றிப் புளகம் எய்தி ஆனந்தக் கண்ணீர் ததும்பி நிற்கும் நிலையைக் கற்போர் மனங்கசியப் பாடுகின்றார்.

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துஉன் விரையார் கழற்கு, என் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் 'போற்றி சயசய போற்றி' என்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுகொள்ளே!

என்பது அத்திருப்பாடல்.

நம்மாழ்வாருடைய திருவாய்மொழியும், உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதிநலம் அருளினான் யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே! என்று தான் தொடங்குகின்றது.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Dharmapuri

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size