Try GOLD - Free

Dravida Vaasippu Magazine - March 2021

filled-star
Dravida Vaasippu
From Choose Date
To Choose Date

Dravida Vaasippu Description:

திராவிட இயக்கத்தின் கடந்த கால வரலாறும் நிகழ்காலப் போராட்டங்களும் எதிர்கால செயல் திட்டங்களையும் வாசிப்பின் வழியாகப் இன்றுள்ள தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் கடத்தும் எளிய முயற்சி.

In this issue

வணக்கம். 2021 தமிழக சட்டசபைத் தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாகக் கொண்டுவருகிறோம். கடந்த டிசம்பர் 2020 இதழ் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தை முன்வைத்து "சி.என். அண்ணாதுரை எனும் நான்" என்கிற தலைப்பில் வெளியானது. ஜனவரி 2021 இதழ், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தை முன்வைத்து "மு. கருணாநிதி எனும் நான்" என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளைக் கொண்டு வெளியானது. பிப்ரவரி 2021 இதழ் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக "இனி தான் ஆரம்பம்" என்கிற தலைப்பில் வெளியானது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், "ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி" எனும் தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி இருக்கும் கட்டுரைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறோம். இன்றைய சூழலில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம் என்பதையே இந்தக் கட்டுரைகள் பறைசாற்றுகிறது. இந்தக் கட்டுரைகள் ஏன் ஒருவர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

இந்த நூலை வாசித்து, உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் அனுப்பி வாசிக்க வைக்குமாறு வேண்டுகிறோம். இந்த சிறு நூல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு சிறு பங்கை ஆற்றும் என்றும் நாம் நம்புகிறோம்.

Recent issues

Related Titles

Popular Categories