Denemek ALTIN - Özgür

சாணக்கியனின் பிரேரணையை நிறைவேற்ற ஏன் தாமதம்?

Virakesari Daily

|

September 02, 2025

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சூழலை உருவாக்கும் பிரேரணையையே தனிநபர் பிரேரணையாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றில் தாக்கல் செய்திருக்கிறார். எனவே அந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்த முடியும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்து தாமதமடைந்து வருகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்திருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவோம் என அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

எனவே அரசாங்கம் அடுத்த வருட ஆரம்பத்தில் அல்லது நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமா என்பது இன்னும் உறுதியில்லை. மாகாண சபை தேர்தல் என்பது தற்போது வெறும் கானல் நீராகி வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இது இவ்வாறிருக்க மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் உட்பட சகல அரசியல் கட்சிகளும் வெகு விரைவில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே அமைப்பு) வலியுறுத்தியுள்ளது.

மாகாணசபை முறைமையை நீக்கும் நிலைப்பாட்டில் இருந்தால் அதனையாவது மக்களிடம் கூறுமாறு வலியுறுத்துகின்றோம். ஒரு மாதத்துக்கு முன்னர் எமது அமைப்பினால் மாகாணசபை தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதற்கு எவ்வித பதிலும் இல்லை. அதேவேளை அரசியல் கட்சிகளுக்கும் தாம் எதிர்க்கட்சியிலிருக்கும் போது மாத்திரமே மாகாணசபைத் தேர்தல் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியமைக்கும் போது அதனை மறந்து விடுகின்றனர் என்றும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அந்த வகையில் தேர்தல் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. மாகாண சபைத் தேர்தல் இலங்கையைப் பொறுத்தவரையில் மிகத் தீர்க்கமானதாக காணப்படுகிறது.

Virakesari Daily'den DAHA FAZLA HİKAYE

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size