Denemek ALTIN - Özgür

இணையத்தில் திருடப்படும் தகவல்கள்

Vidivelli Weekly

|

May 15, 2025

முன்னர் குறிப்பிட்டது போல ஓர் இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் உயிரற்ற, அசையா, சடப் பொருளாக இருந்தால் எம்மீது எந்தவிதமான பாதிப்பினையும் செலுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தின் சக்தி

ஆனால், கருவிகள் எம்மிடையே சமூக ஊடாட்டத்தை தூண்டி விட்டிருக்கின்றன. எமது உணர்வுகளை செயல்பட வைக்கின்றன. தம்மைப் பயன்படுத்த எம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. அதற்குத் தனியான இலக்கு உண்டு. எமது உளவியலை எமக்கு எதிராகத் தூண்டிவிடுகிற வல்லமையும் அதற்கு உண்டு.

பிரபல சமூக ஊடகத்தளங்களான Facebook, Twitter, Instagram, Snapchat, Tiktok, Youtube யாவும் ஈர்த்திழுக்கும் தொழில்நுட்ப உத்தியால் உருவாக்கப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணங்கள், உளப்பாங்கு மற்றும் நடத்தைகள் என்பவற்றில் தாக்கத்தைச் செலுத்தும் இலக்கில் உருவாக்கப்பட்டவை. இவற்றை வடிவமைக்கும் போது தொழில்நுட்ப நிறுவனங்கள் மனித உணர்வு, ஊக்கம், இயலுமை, தூண்டுதல் என்பவற்றை நன்கு புரிந்து செயல்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தும் போது, எமது கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தி, சமூகத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்கின்ற ஒரு பிரஜையின் உள்ளுணர்வை அவை எமக்கு வழங்குகின்றன. அத்தோடு, கோடிக்கணக்கான டொலர்களை செலவழித்து, வலைத்தளங்களின் ஒவ்வொரு சிறு கூறுகளையும் கல்வியறிவற்றவர்களும் இலகுவாகப் பயன்படுத்தும் விதத்தில் அவை உள்ளடக்கியுள்ளன. இதனால், மேற்குறித்த தளங்களை கற்றவர்களைப் போல கல்வி அறிவில் குறைந்தவர்களும் மிகத் துரிதமாகப் பயன்படுத்த முடியும். அதற்காக, கையேடுகளை பயன்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. ஓரிரு தடவைகள் பயன்படுத்தினாலே போதும், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும் திறமை ஏற்பட்டு விடுகிறது. இதனையே, இலத்திரனியல் கருவிகளது ஈர்த்திழுக்கும் சக்தி என்கிறோம்.

சமூக வலைத்தளங்களின் ஈர்த்திழுக்கும் சக்தியுடன் கூடிய வடிவமைப்பு இன்று முக்கிய ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இவை மனித சமூகத்தின் உண்மையான சமூக ஊடாட்டத்தை வளப்படுத்தியிருக்கின்றனவா அல்லது குறைத்திருக்கின்றனவா என்ற பிரதான வினாவை அண்டியதாக விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

Vidivelli Weekly'den DAHA FAZLA HİKAYE

Vidivelli Weekly

மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 22, 2025

Vidivelli Weekly

இலங்கை-பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

May 22, 2025

Vidivelli Weekly

மன்னார்-புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே

வன்மையாக கண்டிக்கிறோம் என பாராளுமன்றில் ரிஷாத் தெரிவிப்பு

time to read

1 mins

May 22, 2025

Vidivelli Weekly

ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்டீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார். இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.

time to read

1 mins

May 22, 2025

Vidivelli Weekly

அவள் கதை" மிஸ் கோலால் ஏற்பட்ட தொடர்பு மத்ஹபை மாற்றிய விவாக பதிவாளர்

இருள் சூழத்தொடங்கிய மாலை வேளையில் ஒரு பெண்ணின் குரல்...சேர்... திரும்பிப் பார்க்கிறேன்.

time to read

2 mins

May 22, 2025

Vidivelli Weekly

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவம்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

time to read

1 min

May 22, 2025

Vidivelli Weekly

உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!

இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது

time to read

4 mins

May 22, 2025

Vidivelli Weekly

பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர்.

time to read

3 mins

May 22, 2025

Vidivelli Weekly

மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் ஐந்தாம் வருட நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை பேராதனை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபு மொழித் துறையின் முன்னாள் தலைவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முன்னாள் பணிப்பாளரும், கல்விமானுமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஐந்தாவது வருட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கொழும்பு, மருதானை தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

time to read

1 min

May 22, 2025

Vidivelli Weekly

'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' செவ்வாயன்று நூல் வெளியீட்டு விழா

இலங்கையில் நடைபெற்ற திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய 'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாயன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 22, 2025

Translate

Share

-
+

Change font size