Denemek ALTIN - Özgür
சூடாமணியின் சேமிப்பு
Tamil Murasu
|July 20, 2025
“இதுதான் கடைசி, இந்தப் பழக்கத்தை விடுங்க,” முகத்திற்கு நேராக நீட்டியவள் கோபத்துடன் சென்றாள். “ம்ம்...ஒரு பிரிண்ட் எடுத்து வர இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” என்றபடி சான்றிதழைக் கோப்பைக்குள் சூடாமணி வைத்தார். அந்த நீல நிறக் கோப்புடன் அறைக்குள் நுழைந்தார். மகளின் நெருங்கிய தோழியின் தந்தை இறப்புக்குச் சென்றவளிடம், “மறக்காமல் அதை எடுத்து வா...” என்றார்.
“அதெல்லாம் அந்தக் காலம் இப்போ எல்லாம் டிஜிட்டல் தான்!”
“இருக்கட்டுமே, அதில் ஒண்ணு.”
“அதெல்லாம் முடியாது!” என்றவள் வெளியே செல்வதைப் பெருமூச்சுவிட்டபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.
சூடாமணியின் நெருங்கிய தோழிகள் அன்னக்கொடியும் யாஸ்மீனும் விரும்பிச் செய்யும் செடி வளர்ப்பையும் தையல் வேலைகளையும் மாறி மாறிக் கூறி மகிழும்போது, “அவங்க செய்றது நேரத்தைப் போக்குவதற்கு. இது என் உயிரோடு கலந்தது.” என்பார். இறப்புச் சான்றிதழ்களுடன் செய்தித்தாள்களில் வரும் அதன் அறிவிப்புகளையும் நேர்த்தியாக வெட்டி வைத்திருந்தார். நீல நிறக் கோப்பின் முதல் பக்கத்தை வழியும் கண்ணீர் மங்கலாக்கியது. அடுத்த பக்கத்தைப் பழைய நினைவுகளோடு புரட்டினார் சூடாமணி.
நல்லதம்பி காவல் துறையில் பணிபுரிந்தவர். அறுபதுகளில் ஒருவரின் மரணத்தை உறுதி செய்ததும் சான்றிதழ்களைக் கைகளிலேயே எழுதி அதில் பதிவாளர் எனும் இடத்தில் கையெழுத்து இட்டுத் தருவார். அந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதும், “அடப் பாவி இப்படிச் செய்துட்டியே...” என்று மார்பில் அடித்துக்கொண்டு அழும்போது தூக்கிவாரிப் போட்டது. “இறந்தவனை உனக்குத் தெரியுமா?” என்று அருகில் அமர்ந்திருக்கும் ரிஸ்வான் கேட்கும்போது “இல்லை” என்று மட்டும் தலையசைத்தார்.
“நீங்கதான் அதில் கையெழுத்துப் போடணுமா?” மனைவி கவலையுடன் கேட்கும்போது, “எப்பொழுதும் இல்லை. கையெழுத்துப் போடும் மேலதிகாரி விடுப்பில் இருக்கும்போது மட்டும்தான் பதிவாளர் எனும் இடத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவேன். ஒருவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள்தான் உறுதிசெய்து சான்றிதழ் தர வேண்டும்,” சூடாமணியின் முகம் கேள்விகளால் நிறைந்து வழிவதைக் கவனித்தவர், “அப்புறம், நான் ஏன் கையெழுத்துப் போடணும்? அதுதானே?” என்றார்.
“ஆமாங்க...”
“ஒருவர் இறந்ததும் அவங்க அடையாள அட்டையைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைக்கணும். அதில் ஒரு சிறிய ஓட்டையைப் போட்டுக் கொடுப்போம். அதை வைத்துக்கொண்டுதான் மற்றக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும். அப்போதுதான் சிலர் மரண சான்றிதழ்களையும் எங்களிடம் தரச் சொல்வார்கள்,” எனும்போது நல்லதம்பியின் குரல் இளகியது.
Bu hikaye Tamil Murasu dergisinin July 20, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size
