Facebook Pixel காலந்தோறும் கலைஞர்களின் அரங்கம் | Tamil Murasu - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

காலந்தோறும் கலைஞர்களின் அரங்கம்

Tamil Murasu

|

July 06, 2025

சிங்கப்பூரில் தமிழர்கள் கல்வியுடன் இலக்கியம், கலைகள், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் மேம்பாடு காண தொடக்ககாலம் முதல் தமிழ் முரசு உந்துசக்தியாக இருந்து வருகிறது.

- வில்சன் சைலஸ்

காலந்தோறும் கலைஞர்களின் அரங்கம்

தமிழ் முரசின் நிறுவனர் கோ. சாரங்கபாணி 1952ல் தொடங்கிய தமிழர் திருநாள் இந்நாட்டின் தமிழர்களின், குறிப்பாகப் பாட்டாளி வர்க்கத்தினரின் கலை ஆர்வத்துக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கியக் களமாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது.

மேடை நாடகங்களுக்கு ஆதரவு

“சிங்கப்பூரில் தமிழ் மேடை நாடகங்கள் அரங்கேறத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அன்று தமிழ் முரசு தந்து ஆதரவளித்ததால்தான் அந்தக் கலை நிலைபெற்றது,” என்று குறிப்பிட்டார் இந்நாட்டின் முன்னோடி மேடை நாடகக் கலைஞர்களில் ஒருவரான 95 வயது திரு எஸ் சப்தகிரி சர்மா (எஸ்எஸ் சர்மா).

தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் நாடகங்கள் அரங்கேறுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ் முரசு முன்னின்று அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் முரசு தந்த ஊக்குவிப்பால் பல நல்ல கலைஞர்கள் உருவானதோடு பின்னாள்களில் அவர்கள் வானொலி, தொலைக்காட்சியிலும் புகழ்பெற தமிழ் முரசின் ஊக்குவிப்பு பேருதவியாக இருந்ததாக நினைவுகூர்ந்தார் திரு சர்மா.

“பல கலை நிகழ்ச்சிகள்பற்றி தமிழ் முரசு நிறுவனரும் ஆசிரியருமான தமிழவேள் கோ சாரங்கபாணி தமிழ் முரசில் வெளியிட்டதுடன் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தும் முன்னின்று நடத்தியும் உதவினார்,” என்றார் திரு சர்மா.

2000ஆம் ஆண்டின் இறுதிவரையில் தமிழ் முரசில் கலைத்துறை தொடர்பான செய்திகளுக்காக வாரந்தோறும் கலை முரசு என்ற தனிப் பக்கம் இடம்பெற்றது.

தற்போது தனியாகப் பக்கம் இல்லையென்றாலும் தமிழர்கள் பங்கேற்கும், படைக்கும் கலைச்செய்திகள், கலைஞர்கள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

“என் முதல் நாடகம் மேடையேறியபோது தமிழ் முரசு கொடுத்த ஆதரவை மறக்க முடியாது,” என்றார் சிங்கப்பூரின் மேடை நாடக முன்னோடிகளில் ஒருவரான 91 வயது திரு ச. வரதன்.

1955ஆம் ஆண்டில் நியூ வேர்ல்ட் அரங்கில் பகுத்தறிவு நாடக மன்றம் மேடையேற்றிய 'நச்சுக் கோப்பை' நாடகம் தமிழ் முரசில் அப்போது விளம்பரப்படுத்தப்பட்டது. நாடகத்தைப் பார்க்க தமிழ் முரசு சார்பில் திரு வை திருநாவுக்கரசு வந்ததை திரு வரதன் பகிர்ந்துகொண்டார்.

Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE

Tamil Murasu

Tamil Murasu

‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை

நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்

ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்

அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்

இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி

இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.

time to read

1 mins

September 23, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Tamil Murasu

நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை

நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size