Denemek ALTIN - Özgür
ஸ்ரீஅரவிந்தர் என்னும் ஒளிவிளக்கு!
Dinamani Vellore
|August 15, 2025
அரவிந்தர் சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையை தோற்றுவிப்பதில் அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார்.
அரவிந்தரின் மேடைப் பேச்சு, அதைக் கேட்கும் அனைவரின் மனத்தையும் கொள்ளை கொள்ளக் கூடியது. திருந்திய உச்சரிப்பு, உணர்ச்சி பொங்கப் பேசும் ஆற்றல், தன் தரப்பை ஆணித்தரமாக நிறுவுவதில் தென்படும் விவாதக் கோணம், முக்கியமாக அந்த மதுரக் குரல்...என்றிப்படி அவரது மேடைப் பேச்சின் சிறப்பம்சங்கள் பல. அவரது சொற்பொழிவுக்கு ஏராளமான பொதுமக்கள் ரசிகர்களாக இருந்தார்கள். சுதந்திர மேடைகளில் அவர் பேசுகிறார் என்ற அறிவிப்பு வந்தால் ஆயிரக்கணக்கானோர், அவர் பேச்சைக் கேட்க குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். அரசியல் பிரமுகர்களும் அவர் சொற்பொழிவை விரும்பி கேட்டு வியந்தார்கள்.
அவரது சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தோற்றுவிப்பதில் கொல்கத்தா பிரமுகரான அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
மகாத்மா காந்தி மட்டுமா, பிரிட்டிஷ் அரசும்கூட அரவிந்தரின் பேச்சாற்றலைப் பற்றி அறிந்து வைத்திருந்தது. மக்களை மயக்கும் சொற்பொழிவாளரான அரவிந்தரை வெளியே விட்டுவைத்தால், நாளுக்கு நாள் மக்களிடையே சுதந்திர வேட்கை அதிகரிக்குமே?
எனவே, அரவிந்தரைக் கைதுசெய்யும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது அது. அதற்கு ஏதுவாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 1908-ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி, முசாபர்பூர் வெடிகுண்டு விபத்தில் இரு வெள்ளைக்காரப் பெண்மணிகள் இறந்துபோனார்கள். அந்த சம்பவத்துக்கும் அரவிந்தருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காவல் துறையினர் அறிவார்கள்.
அதனால் என்ன? அந்தப் பழியைத் தூக்கி அரவிந்தர் மீது போடுவோம்; அந்த விபத்துக்கு அவர் செய்த சதிதான் காரணம் என்று கூறுவோம். அதனால் தான் அவரைக் கைது செய்கிறோம் என அரவிந்தருக்கு தண்டனை தரப்படுவதை நியாயப்படுத்தி விடுவோம். இப்படி நினைத்த காவல் துறை அரவிந்தரைக் கைது செய்தது. அவர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தான் வழிபடும் கண்ணன் அவனைப் பற்றித் தவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறான் என்பதாக அரவிந்தர் புரிந்துகொண்டார். கண்ணனைக் குறித்து சிறைக்குள்ளேயே தவம் நிகழ்த்தலானார்.
Bu hikaye Dinamani Vellore dergisinin August 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Vellore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Vellore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Vellore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size