Denemek ALTIN - Özgür
தொழிலாளர் நலன் காப்போம்!
Dinamani Tiruvarur
|January 19, 2026
உழைப்பு மனித நாகரிகத்தின் அடித்தளம்.
மனிதன் கல்லைச் செதுக்கி கருவியாக்கிய நாளிலிருந்தே, அவன் உழைப்பின் பயன் சமூகத்தின் முன்னேற்றமாக மாறியது. ஆனால், அந்த உழைப்பாளியின் வாழ்வு, பாதுகாப்பு, மரியாதை ஆகியவை நீண்ட காலம் வரை புறக்கணிக்கப்பட்டே வந்தன. அதிகாரமும் மூலதனமும் சேரும் இடங்களில், உழைப்பு மலிவான பொருளாகவும், உழைப்பாளி மாற்றக்கூடிய கருவியாகவும் பார்க்கப்பட்டான். இந்த அநீதிக்கெதிரான உலகளாவிய விழிப்புணர்வே தொழிலாளர் நலன் என்ற கருத்தை உருவாக்கியது.உலக அளவில் தொழிலாளர் நலனுக்கான முதல் பெரிய அசைவு, தொழில் துறைப் புரட்சியுடன் தொடங்கியது. பிரிட்டனில் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்சாலைகள் பெருகியபோது, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரும் தினமும் 14, 16 மணி நேரம் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய வேண்டிய நிலை உருவானது. குழந்தைகள் இயந்திரங்களில் சிக்கி உயிரிழந்தனர்; தொழிலாளர்கள் விபத்துகளிலும் நோய்களிலும் சிதைந்தார்கள்.
இதன் எதிரொலியாகவே தொழிற்சாலை சட்டங்கள் போன்றவை உருவாயின. வேலை நேரக் கட்டுப்பாடு, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, பாதுகாப்பு விதிகள் ஆகியவை மெதுவாக சட்ட வடிவமும் பெறத் தொடங்கின.
1919-இல் உருவான சர்வதேச தொழிலாளர் அமைப்பு உழைப்பாளியின் நலன், உலக அமைதியின் அடித்தளம் என்ற தத்துவத்தை முன்வைத்தது. குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பான வேலைநிலைகள், சங்கம் அமைப்பதற்கான உரிமை, சமூகப் பாதுகாப்பு ஆகியவை உலகளாவிய இலக்குகளாக மாறின.
மக்கள் நலன் சார்ந்த அரசுகள் உருவான நாடுகளில், தொழிலாளர் நலன் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது அல்ல; அது நீடித்த வளர்ச்சியின் முன்நிபந்தனை என்ற புரிதல் வேரூன்றியது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. ஆனால், இந்தியாவின் தொழிலாளர் வரலாறு காலனித்துவ ஆட்சியின் இருண்ட நிழல்களோடு பின்னிப் பிணைந்திருந்தது.
1926-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தொழிற்சங்கங்கள் சட்டம், தொழிலாளர் நலன் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை. இந்தச் சட்டம் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது. சங்கம் அமைப்பது குற்றம் அல்ல; அது ஒரு உரிமை என்ற கருத்து முதல்முறையாக சட்டமானது.
Bu hikaye Dinamani Tiruvarur dergisinin January 19, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvarur
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்
களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 08, 2026
Dinamani Tiruvarur
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Dinamani Tiruvarur
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Tiruvarur
திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விபத்தில் உயிரிழப்பு
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி (76) செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக
சட்டப் பேரவைத் தேர்தலில் 101 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Tiruvarur
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Listen
Translate
Change font size
