Denemek ALTIN - Özgür

இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!

Dinamani Tiruvarur

|

July 06, 2025

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

- முனைவர் ம.பெ.சீனிவாசன்

முனைவர் ம.பெ.சீனிவாசன்

இந்த வகையில் பாரியின் மறைவுக்காக கபிலரும், பாரி மகளிரும், அதியமானஞ்சிக்காக ஒளவையும் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் புகழ்மிக்கவை; இன்றும் நம் கண்களில் நீர் சுரக்க வைப்பவை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையு முடையேம்; எம் குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (112)

பாரி மகளிர் தந்தையையும் தமக்குரிய மலையையும் இழந்து செயலற்று ஏங்கிப் பாடுதலின் இது கையறு நிலையாயிற்று. இந்த அவலத்துக்கு இடையிலும் வஞ்சனையால் வென்ற மூவேந்தரை, 'வென்று எறி முரசின் வேந்தர்' என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

ஏனையோர்க்கெல்லாம், 'இனியன்' ஆகிய பாரி மூவேந்தர்க்கு மட்டும் 'இன்னான்' (வேண்டாதவன்) ஆனது எப்படியோ? என்னும் கபிலரின் கூற்றிலும் இவ்வெள்ளல் குறிப்பே எதிரொலிக்கின்றது.

அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே (115:5-6) என்பன அவரின் பாடலடிகள்.

இவ்வாறே அதியமானஞ்சியின் மறைவுச் செய்தி கேட்டதும், இல்லாகியரோ காலை மாலை! அல்லாகியர் யான் வாழும் நாளே! (232) என்னும் ஒளவையின் பாடலில் ஒலிக்கும் அவலத்தையும் அளவிட்டுச் சொல்லவியலாது.

மேலும், 'சிறியகட்பெரினே' (233) எனத் தொடங்கும் பாடலில், இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி முடிப்பது அதியமான் நெடுமான் அஞ்சியின் வள்ளன்மை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளது.

Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvarur

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்

ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

நகரங்களைக் கைப்பற்றுங்கள்!

போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size