Denemek ALTIN - Özgür

வங்கிகளின் சேவைத் தரம் தொடரட்டும்!

Dinamani Tiruvarur

|

June 28, 2025

வங்கிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுவரும் எண்ம புரட்சியில் பல பழைமை அனுபவங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. காணாமல் போனதில் முக்கியமானது, வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நிலவிய தனிப்பட்ட தொடர்பு (பர்சனல் டச்) என்ற பாலமாகும்.

- எஸ்.ராமன்

சமுதாயத்தில் குறிப்பிட்ட அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு மட்டும் வங்கிசார்ந்த வசதிகள் என்ற சித்தாந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அந்த வசதிகளை அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் வகையில் பரவலாக்கப்பட்டது, நம் பொருளாதார சரித்திரத்தில் ஓர் அரிய நிகழ்வாகும்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தரப்பினரையும் சார்ந்ததாக இருத்தல் வேண்டும் என்ற காந்திய கொள்கைக்கு இந்த நிகழ்வுகள் வலுசேர்த்தன. குடிசைத் தொழில் முதல் விவசாயத் துறை வரையிலான பயனாளிகள், நாளுக்குநாள் பெருகிவருவது வங்கித் துறையின் பயன்பாடுகள், சமுதாயத்தில் பெரும்பாலான வர்களைச் சென்றடைந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

உலக பொருளாதார தளத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் நாட்டின் பிரதிபிம்பமாக வங்கிகளின் செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன. வங்கிகளின் செயல்பாடு, இருசக்கர வாகனத்தைப் போன்றது. சேமிப்பாளர்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாக பெற்று, தேவைப்படுவோருக்கு, அந்தப் பணத்தை கடனாக வழங்கி, லாபம் ஈட்டுவதுதான் வங்கிகளின் அடிப்படைச் செயல்பாடாகும். இந்தச் செயல்பாட்டில், சக்கரங்களின் வேகசுழற்சி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து, வாகனம் தடையின்றி நகர்வதற்கு வழிவகுக்க வேண்டும். அந்த செயல்பாடுகளில், எந்த பக்கம் சுணக்கம் ஏற்பட்டாலும், அது வங்கித் துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

எடுத்துக்காட்டாக, கடன் தேவைகளுக்கு ஏற்றபடி டெபாசிட் தொகை வளரவில்லை என்றால், அந்த குறையை நிறை செய்ய வங்கிகள் மற்ற நிதி ஆதாரங்களை அணுக வேண்டி இருக்கும். சில சமயங்களில் அவற்றுக்கான செலவினங்கள் அதிகமாக இருக்கலாம் அல்லது சில நிதிஆதாரங்களின் காலக்கெடு தேவைக்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். இதனால், வங்கிகளின் லாபம் பாதிப்படைவதுடன், அவற்றின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படும்.

Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvarur

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்

ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

நகரங்களைக் கைப்பற்றுங்கள்!

போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்

time to read

1 mins

January 11, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!

பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size