Denemek ALTIN - Özgür
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
Dinamani Tiruvannamalai
|June 20, 2026
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
-
தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ
இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோ, தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.
மெக்ஸிகோவுக்காக லூயிஸ் ரோமோ 50-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். தென் கொரிய கோல் போஸ்ட் நோக்கி வந்த பந்தை அந்த அணியின் கோல் கீப்பர் கிம் சியுங் கியு கைப்பற்றினார்.
ஆனால், சக தென் கொரிய வீரர் லீ ஜி ஹியுக்குடன் எதிர்பாராத விதமாக அவர் மோதியதில், பந்து அவரிடமிருந்து நழுவியது. அவ்வாறு நழுவி பெனால்ட்டி ஏரியாவில் விழுந்த பந்தை, லூயிஸ் தன் வசப்படுத்தி எளிதாக கோல் அடித்தார்.
மறுபுறம், தென் கொரியாவின் கோல் முயற்சிகள் கடைசி வரை பலன் பெறாமலேயே போனது. குறிப்பாக, 87-ஆவது நிமிஷத்தில், மெக்ஸிகோவின் கோல் போஸ்ட் அருகே, தென் கொரியாவின் சோ கியு சங் தலையால் பந்தை முட்டி கோல் அடிக்க முயல, மெக்ஸிகோ கோல் கீப்பர் ரௌல் ராங்கெல் அதை திறம்பட தடுத்தார்.
அவர் தட்டிவிட்டு மீண்டும் களத்துக்கு வந்த பந்தை, மற்றொரு தென் கொரியரான யாங் ஹியுன் ஜூன் கோலாக மாற்ற முயல, அதையும் திறம்பட தடுத்தார் ராங்கெல். கடந்த உலகக் கோப்பை போட்டியில் குரூப் சுற்றுடனேயே வெளியேறிய மெக்ஸிகோ, இந்தப் போட்டியில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலான தனது இரு ஆட்டங்களையும் சொந்த மண்ணில் விளையாடிய மெக்ஸிகோ, அதில் வெற்றி கண்டு ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.
கனடாவுக்கு வரலாற்று வெற்றி
கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா 6-0 கோல் கணக்கில் கத்தாரை அபார வெற்றி கண்டது. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கனடாவுக்கு இது முதல் வெற்றியாகும்.
Bu hikaye Dinamani Tiruvannamalai dergisinin June 20, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvannamalai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvannamalai
கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்தது நியாயமானதே. அளவுக்கு மீறிய நடவடிக்கை அல்ல' என்று தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது
காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Listen
Translate
Change font size

