Denemek ALTIN - Özgür
மனிதப் பேரவலம்!
Dinamani Tiruvannamalai
|March 22, 2025
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும், இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1948-க்கும் முன்னர் வரை பாலஸ்தீனப் பகுதியானது, பிரிட்டனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் அதிரடி நடவடிக்கையால் உயிருக்குப் பயந்து அந்த நாட்டிலிருந்து வெளியேறிய யூதர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இத்தகைய சூழலில், அகதிகளாகப் பரிதவித்த யூத மக்கள் அனைவரும் அமெரிக்காவின் தலையீட்டால் பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
ஏற்கெனவே, பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கும், புதிதாகக் குடியமர்த்தப்பட்ட யூதர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து, யூதர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதியை தனி நாடாக, அதாவது இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்க அமெரிக்கா முன்முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டுக்கு ஐ.நா. சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், இஸ்லாமியர்கள் நீண்ட காலமாக வசித்துவரும் பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என இந்தியா தலைமையிலான அணிசாரா நாடுகள் குரல் கொடுத்தன. ஆனால், இதற்கு ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைக்காததால், பாலஸ்தீன பிரச்னை இன்னமும் நீடிக்கிறது.
Bu hikaye Dinamani Tiruvannamalai dergisinin March 22, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvannamalai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvannamalai
பெண் கல்வியின் அவசியம்
சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Tiruvannamalai
சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்
அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
October 12, 2025
Dinamani Tiruvannamalai
கோலிவுட் ஸ்டூடியோ!
நட்சத்திரங்களின் ரீயூனியன்!
1 min
October 12, 2025

Dinamani Tiruvannamalai
காலம் பெற உய்யப் போமின்
'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.
2 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
பழந்தமிழரின் காலநிலை அறிவு!
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயக்கங்களால் உலகம் இயங்கி வருகிறது. அவற்றுள், நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது. அதனால்தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து, வான் சிறப்பு என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் படைத்துள்ளார்.
1 min
October 12, 2025

Dinamani Tiruvannamalai
தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!
ஓர் அரசு இயங்கப் பொருள் வருவாய் மிக மிக இன்றியமையாததாகும். இதனை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் என்ற குறள் (385) சிறப்பாகக் கூறுகிறது.
1 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
வள்ளலாரை வணங்கிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது. இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. இந்தத் திரைப்படம் வட சென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்று வெற்றிமாறன் கூறி யிருக்கிறார். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'வடசென்னை' படம் பெரியளவில் பேசப்பட்டது. இதனால், இந்தத் திரைப்படத்திற்கான எதிர் பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Tiruvannamalai
இதிகாசங்களால் ஈர்க்கப்பட்ட சிறுமி
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தொலைக்காட்சியில் பார்த்ததால் வில்வித்தை மீது சிறுமி வெனிஷா ஸ்ரீக்கு ஆர்வம் ஏற்பட்டு வில்வித்தை வீராங்கனையாக மாறியுள்ளார்.
1 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
2 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
2 mins
October 12, 2025
Translate
Change font size