Facebook Pixel காலம் பெற உய்யப் போமின் | Dinamani Tiruppur - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

காலம் பெற உய்யப் போமின்

Dinamani Tiruppur

|

October 12, 2025

'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.

- முனைவர் ம.பெ. சீனிவாசன்

காலம் பெற உய்யப் போமின்

காலம்பெற மலர்நீரவை தூவித் தொழுதேத்தும் ஞாலம்புகழ் அடியார்உடல் உறுநோய்நலி யாவே (160)

என்னும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில், 'காலை வேளையில் மலரும் நீரும் தூவி இறைவனை வழிபடுமுறை' பேசப்பட்டுள்ளது. அங்ஙனம் வழிபடும் அடியார்களை 'உடலுறு நோய் வருத்தாது' என்கிறார் அவர்.

'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' (5) என்னும் திருப்பாவைப் பாசுரத்தில் விடியற்காலையில் கண் விழித்தெழுந்து நீராடிப் பாவை நோன்பில் ஈடுபடும் பெண்கள், 'தூமலர் தூவித் தொழுது' கண்ணனை வழிபட்டதாகவே அறிகிறோம்.

இவ்வொரு பொருளேயன்றி 'முன்னதாக' என்னும் பொருளிலும், 'காலம் பெற' எனும் சொல் எடுத்தாளப்பெற்றதையும் பக்திப் பனுவல்களில் பார்க்கலாம்.

பெரியாழ்வார் தம்முடைய திருமொழி ஒன்றில், இறைவன் தம் மனத்தின்கண் குடியேறி விட்டதால், 'நோய்களே! உங்களுக்கு இனி இடமில்லை. ஓடிப் போய்விடுங்கள்' என்று சொல்லும் வகையில் ஒரு பதிகமே (5-2) பாடியிருக்கிறார். அப்பதிகத்தின் முதற்பாசுரத்தில் 'காலம் பெற' என்னும் சொல்லை அவர் பொருத்தமுறக் கையாண்டிருப்பதைக் காணலாம்.

நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின், மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார், பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டன்று பட்டினம் காப்பே!

இப்பாசுரத்தில் இறைவன் வருவதற்கு முன்பாகத் தம் உடம்பில் குடியேறியிருந்த நோய்களை நோக்கி, 'நீங்கள் இனி வெளியேறி விடுங்கள்' என்கிறார் ஆழ்வார். அதனைக் 'காலம் பெற உய்யப் போமின்' என்னும் தொடரால் உணர்த்துகிறார்.

Dinamani Tiruppur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

இராவணன் புகழைத் திருத்தும் பெருமிதக் கவி!

இராமவதாரக் காப்பியத்தில் எல்லாப் பாத்திரங்களின் படைப்புகளுள்ளும் தம்மைக் கரைத்துக் கொண்டவர் கம்பர்.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

நல்லாட்சியின் மூன்று காவலர்கள்!

மக்களாட்சி அமைப்பில் பல்வேறு குழுக்கள் தோன்றுவது இயல்பானது. அவை நல்ல நோக்கத்துடன் செயல்பட்டால் புதிய சிந்தனைகள் உருவாகவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும் அமையும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruppur

இன்று நீட் மறுதேர்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruppur

தமிழக அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியீடு

நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளது.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது

பிற நாடுகளின் குப்பை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கண்டிப்புடன் தெரிவித்தது.

time to read

1 min

June 21, 2026

Dinamani Tiruppur

அழகான குதிரைகள் 5

வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

திமுக கூட்டணியிலிருந்து ஐயூஎம்எல் விலகல்

திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (ஐயூஎம்எல்) விலகுவதாகவும், இனி தவெக கூட்டணியில் தொடரவுள்ளதாகவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Tiruppur

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணம்: இனி இரு மடங்கு அபராதம்

ரயிலில் பயணச் சீட்டு இன்றி பயணிப்போருக்கு, பயணச் சீட்டு பரிசோதகர் விதிக்கும் அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு சனிக்கிழமை (ஜூன் 20) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 min

June 21, 2026

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!

\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.

time to read

1 mins

June 21, 2026

Translate

Share

-
+

Change font size