Facebook Pixel அல்லி நகரத்து மண்வாசனை... | Dinamani Tirunelveli - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

அல்லி நகரத்து மண்வாசனை...

Dinamani Tirunelveli

|

June 11, 2026

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

- முதுமுனைவர் அரங்க. பாரி

அல்லி நகரத்து மண்வாசனை...

அவருக்குள் ஓர் ஏக்கம் இருந்தது. 'சினிமா எங்கள் கிராமத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், சினிமாவில் எங்கள் கிராமம் வந்ததில்லையே... அதை வர வைப்பேன்’ என்பதுதான் அந்த ஏக்கம்.

அந்த ஏக்கத்தினோடே சுகாதார ஆய்வாளர் அரசுப் பணியைத் துறந்து, 1970-களில் அல்லி நகரம் என்னும் கிராமத்திலிருந்து சென்னைக்குப் பயணமான பாரதிராஜா, 56 ஆண்டுகளுக்குப் பின்னர் 'பத்மஸ்ரீ' என்னும் பெருமைமிகு விருதுடன், தேசிய - மாநில அளவிலான சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த திரைக்கதையாளர், சிறந்த சமூகப் பொறுப்புணர்வுப் படைப்பாளி போன்ற சாதனைப் பதக்கங்களுடன் உயிரற்ற உடலாய்த் தன் தாய்மண்ணுக்குத் திரும்புகின்றார்.

இடைப்பட்ட காலத்தில் தமிழ்த் திரையுலகையே நகரிலிருந்து கிராமத்துக்குப் பயணப்பட வைத்துள்ள அவரது திரையுலகப் பங்களிப்பை நான்காகப் பகுக்கலாம். கதைக்கரு, கதைக்களம், கதைமாந்தர், கதை மொழி என்று நான்கு தளங்களிலும் பாரதிராஜா தமிழ்த் திரையுலகுக்குப் புதிய வடிவத்தைத் தந்துள்ளார்.

1977-இல் தான் இயக்கிய முதல் படமான '16 வயதினிலே' படத்துக்காக சிறந்த இயக்குநர் என்னும் விருதைப் பெறுவதற்குக் காரணமாக இருந்தது அதன் கிராமியக் கதைக்கருவே. கிராமியம் என்பது தமிழ்நாட்டின் அடையாளம் மட்டுமல்ல; இந்திய அடையாளமும் கூட. அதனால்தான், '16 வயதினிலே' திரைப்படம் 'படகரெல்ல வயசு' என்று தெலுங்கிலும் 'சால்வா சாவன்' என்று ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது.

புராணங்கள், இதிகாசங்கள், தெய்விகத் திருவிளையாடல்கள் என்று இருந்த தமிழ்த் திரையுலகம் சுதந்திரப் போராட்டம், நாட்டு விடுதலை எனப் பயணித்து சமூகம் மற்றும் குடும்பங்களைப் பேசுபொருளாக்கிக் கொண்டது. அதிலும் மேல்தட்டு சமூகங்களையும் குடும்பங்களின் சிக்கல்களையும் நடப்புகளையும் பேசிய தமிழ்த் திரையுலகில் 16 வயதினிலே திரைப்படம் பெரும் உடைப்பை உருவாக்கியது.

இடைநிலைச் சமூகக் குடும்பங்களின் வாழ்கையைப் பேசத்தொடங்கியது. விதவையான குருவம்மா (காந்திமதி), பள்ளிப்படிப்பை முடித்திருந்த மயிலு (ஸ்ரீதேவி), கிராமத்து அடாவடியான பரட்டை (ரஜினிகாந்த்), கிராமத்து அப்பாவி வெகுளியான சப்பாணி (கமல்) என '16 வயதினிலே' திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல கதைக்கருவும் அக்மார்க் கிராமியமே.

Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Tirunelveli

'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tirunelveli

இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!

இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tirunelveli

தொடர வேண்டும் மாற்றம்

உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Tirunelveli

மாநிலங்களவைத் தேர்தல்: கார்கே உட்பட பலர் போட்டியின்றித் தேர்வு

மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கர்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வானார்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Tirunelveli

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tirunelveli

மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tirunelveli

நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு

தமிழ்நாட்டிற்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Tirunelveli

கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதி

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size