Denemek ALTIN - Özgür
முடக்கம் தவிர்ப்பீர்!
Dinamani Tiruchy
|August 16, 2025
மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது என்பதை ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் உணர வேண்டும்.
கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் முதல் ஒரு வாரம் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கிப் போவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இப்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரிலும் அதுதான் நடந்தது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள், கூட்டம் தொடங்கிய ஒரு சில நிமிஷங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு மதியமும் இதே அமளி தொடர அன்று முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இதுதான் நடந்தது. தொடர்ந்து சுமார் ஒரு வாரம் இப்படித்தான் நடந்தது.
ஜூலை 28-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என்ற ஒப்புதலுடன் அவை அமைதியாக நடந்தது. அன்றுகூட பிகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் அவை கூடியதும் சுமூகமான சூழ்நிலை நிலவியது.
பொதுவாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தத் தொடரில் முக்கியமாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.
இந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முழுமையாக விவாதம் செய்ய வேண்டும்; இதே போல், பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி பற்றி விவாதிக்க வேண்டும். அந்த உத்தரவு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. அப்போது, ஆளுங்கட்சி தரப்பில் இவை எல்லாம் விவாதிக்கப்படும். நீங்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.
Bu hikaye Dinamani Tiruchy dergisinin August 16, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruchy
'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' சந்தையில் 10% பங்கு
இந்தியாவைச் சேர்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீதப் பங்கைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
3 mins
June 13, 2026
Dinamani Tiruchy
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!
'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
1 mins
June 13, 2026
Dinamani Tiruchy
பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
சில்லறை பணவீக்கம் 3.93%
உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், கடந்த மே மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tiruchy
தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
June 13, 2026
Translate
Change font size

