Denemek ALTIN - Özgür
உடன்படாவிட்டால் உடன்போக்கு!
Dinamani Tiruchy
|August 10, 2025
காதல் அடைவது உயிரியல் இன்பம் என்று கூறினார் புரட்சிக் கவிஞர். காதல் உயிர்த்தொடர்பு உடையதாக இருக்குமாயின் அதில் ஏமாற்றம், பிரிவு, மனமுறிவு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. வெறும் உடற்கவர்ச்சியில் பிறப்பதன்று உண்மைக் காதல்.
காதலுக்கு இடையூறுகள் வரும். அவற்றைக் காதலர்களின் வலிமைமிக்க உள்ளம் தாங்கி நிற்கும். உறவுக்குள்ள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பரம்பரை வழக்கம்; ஜாதி, செல்வத்தகுதி ஆகியவை காதலுக்குத் தடையாகிவிடுவதைக் காண்கிறோம். இவற்றை மீறி நிகழ்வதே காதலர் உடன்போக்கு. இந்தக் காதல் தடை மீறலாகிய உடன்போக்கைச் சங்க இலக்கியங்கள் மிக அழகாகச் சித்தரிக்கின்றன.
ஏரியில் மழைக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் நிறைந்தது. ஏரி உடைத்துக் கொள்ளுமோ என்று கருதிய ஊரார் பல தடுப்புகளைச் சமைத்தனர்; ஆனாலும், ஒருநாள் இரவில் ஏரி உடைத்துக் கொண்டு வெள்ளமாய் நீர் வெளியேறி விட்டது. இதுவே ஓர் உருவகம். ஏரி உடைந்து வெள்ளம் வெளியேறுவதுபோல் காதலர் உடன்போக்கு மேற்கொள்கின்றனர்.
ஓர் ஆடவன், ஒரு குமரி என இருவரின் உள்ளத்தில் காதல் பூத்தது. மறைவடக்கமாக இருந்த காதல் ஊரார் சிலரின் பார்வையில் பட்டுவிட்டது. இந்தக் களவுச் செய்தி பெற்றோரை எட்டியது. 'மகளே! இனி நீ தினைக் கொல்லைக்குக் காவலுக்காகப் போக வேண்டாம்' என்று தடுத்து விட்டனர். தலைவன் இரவு காலங்களில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமல் தோழியிடம் கவலை தெரிவித்தான். இச்சூழலிலேயே உடன்போக்குத் திட்டமிடப்பட்டது.
தலைவியின் உள்ளமெல்லாம் போராட்டம். எப்படித் துணிந்து போவது? பெற்று வளர்த்தவர்களையும் தோழியரையும் நிலையாகப் பிரிந்தே போவதா? பெற்ற தாயும் செவிலியும் காலை எழுந்து என்னைப் படுக்கையில் காணாது தவிப்பார்களே! என்றெல்லாம் கலங்குகின்றாள். ஒரு வழியாகத் துணிந்து கருக்கல் கரையுமுன் புறப்பட்டு விடுகிறாள். தலைவனிடம் அவளை அடைக்கலப்படுத்துகிறாள் தோழி.
Bu hikaye Dinamani Tiruchy dergisinin August 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruchy
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Tiruchy
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்
அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.
1 min
June 30, 2026
Dinamani Tiruchy
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Translate
Change font size
