Facebook Pixel சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க ரூ.52.44 கோடி | Dinamani Tiruchy - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

சிறுதானிய உற்பத்தியைப் பெருக்க ரூ.52.44 கோடி

Dinamani Tiruchy

|

August 04, 2025

தமிழக அரசு அறிவித்ததுள்ள இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்களில் நிகழாண்டு (2025-2026) ரூ.52.44 கோடியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

- ஆர். முருகன்

திருச்சி, ஆக. 3: இதன்படி, 10 லட்சம் ஹெக்டேரில் 39.28 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024-25) இத்திட்டத்தில் ரூ.46 கோடி ஒதுக்கீடு செய்து 4.15 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அளவில் சிறுத்து, ஊட்டத்தில் பெருத்து, உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். இதற்கு வலு சேர்க்கும் வகையில் 2023-ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

அதை தமிழக அரசு வழிமொழிந்து, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் மூலம் 2023 - 2024-ஆம் ஆண்டில் ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தது. இதன்படி, தமிழகத்தில் இரண்டு சிறப்பு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களைக் கொண்டு சிறப்பு மண்டலம்-1, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களைக் கொண்டு சிறப்பு மண்டலம்-2 உருவாக்கப்பட்டுள்ளது.

Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruchy

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Tiruchy

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

ஜெர்மனி ஐ.டி. நிறுவனத்தை வாங்கும் இந்தியாவின் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி ஐ.டி. நிறுவனமான 'நாகரோ எஸ்இ' நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் கையகப்படுத்த இந்திய ஐ.டி. நிறுவனமான 'பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ்' முன்வந்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அமைச்சரை பதவி நீக்கக் கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர்கள், மேயர் கைது

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் வாரத் தொடக்கத்தில் பங்குச்சந்தை சரிவு!

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை சரிவடைந்தது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Tiruchy

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Translate

Share

-
+

Change font size