Denemek ALTIN - Özgür

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு

Dinamani Thoothukudi

|

July 15, 2025

கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா

சென்னை, ஜூலை 14: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ.அமுதா அளித்த பேட்டி:

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் முதல்வரின் முகவரித் துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக முகாம்கள் நடைபெறும் பகுதியில் ஏற்கனவே வீடு வீடாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் வழியாக 46 சேவைகளும் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும். அவர்கள் தரும் பதில்கள் திருப்தி இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்யலாம். மனுதாரர்கள் தங்களின் மனுக்களின் நிலைமையை இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். இதற்கான பிரத்யேக இணையதளத்தை சிதம்பரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கான கால அளவு 30 நாள்களாக இருந்தது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் விண்ணப்பத்துக்கு தீர்வு காணும் அளவு 45 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்

75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

கடலுக்குச் சென்ற மீனவர்கள் 4 பேர் மாயம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size