Denemek ALTIN - Özgür
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
Dinamani Tenkasi
|June 14, 2026
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
நடிகை, கதை சொல்லி, எழுத்தாளர் என்று பன்முகத் தன்மைகளில் இயங்கும் அவர், பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரங்களுக்கு அம்மாவாக தன்னுடைய இயல்பான, நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.
‘திரைத்துறையின் ஜாலியான அம்மா’ என்று அழைக்கப்படும் அவரிடம் பேசியபோது:
“நான் பெங்களூரில் பிறந்து, பத்தாம் வயது வரை கொல்கத்தாவில் இருந்தேன். அங்கு நான் கற்றது, ரசித்தது, உணவுகள், சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள் போன்றவை எனக்குள் இருந்த கதை சொல்லியைத் தட்டி எழுப்பின. என் தந்தை புத்தகப் பதிப்பாளர். பள்ளிப் போட்டிகளில் நான் பங்கேற்கும்போதெல்லாம் அதற்கான தகவல்களை திரட்டித் தருவார். எப்படிப் பேச வேண்டும் என்றும் சொல்லித் தருவார். அந்தப் பயிற்சிகள்தான் கதை சொல்லியாக நான் இயங்க உதவுகிறது. கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்றேன்.
கதை சொல்வதில் எனக்கு இருந்த ஆர்வத்தால், இதையே தொழிலாக மாற்றிக் கொண்டேன். பள்ளிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் பங்கேற்று மாணவர்களுக்கு கதைகள் கூறுவதை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டுவருகிறேன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளில் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும், மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் கதைகளைச் சொல்கிறேன். கதைகளால் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
எதைப் பற்றிக் கதை சொல்கிறேனோ அதற்குப் பொருத்தமான பாடல்களைப் பாடுவது என் வழக்கம். ஆங்கிலம், ஹிந்தி மொழி பாடல்களை நானே எழுதிவிடுவேன். எதுகை மோனையுடன் எளிமையான வரிகளில் அழகான தமிழ்ப் பாடல்களை என்னுடைய அண்ணி சித்ரா பால்ராஜ் எழுதித் தருவார். பாடல்களுக்கான ட்யூனை என் கணவர் சபேஷ் போட்டுத் தருவார்.
மழை நீரைப் பொழியுது
மழை நீரைப் பொழியுது
துளித்துளியாய் துளித்துளியாய்
சாரல் அடிக்குது
சலசலசலவென்று படபடபடவென்று
மழை பொழியுது
மழை நீரைப் பொழியுது
ஜலம் ஜலம் ஜலம்
ஜலம் ஜலம் ஜலம்
இவ்வாறு இருக்கும் எனது பாடல்கள்.
Bu hikaye Dinamani Tenkasi dergisinin June 14, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tenkasi
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Tenkasi
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Tenkasi
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tenkasi
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Tenkasi
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tenkasi
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

