Facebook Pixel அருங்காட்சியக அதிசயம்! | Dinamani Tenkasi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

அருங்காட்சியக அதிசயம்!

Dinamani Tenkasi

|

May 17, 2026

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

- -என். எஸ். சுகுமார்

கல்வி, ஆய்வு, மகிழ்ச்சிக்காக பண்டைய நவீன நாகரிக சின்னங்களை உள்ளடக்கிய இந்த அருங்காட்சியகங்களில் அரிய பொருள்கள், கலைநய மிக்கச் சிற்பங்கள், இயற்கை அறிவியல் சார்ந்த பொருள்கள், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள், ஓவியங்கள், நாணயங்கள் போன்றவை அடங்கியுள்ளன. இவை கடந்த காலத்தின் சான்றுகளை நிகழ்காலத்தில் மக்கள் அறியவும், அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கான பெட்டகங்கள்.

சிலைகள், கல்வெட்டுகள், பழங்காலக் கருவிகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் தொல்லியல் அருங்காட்சியகங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட கலை அருங்காட்சியகங்கள், விலங்குகள், தாவரங்கள், புதை படிவங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட கலை அருங்காட்சியகங்கள், அறிவியல் சோதனைகள், கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கும் அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

உலகக் கலாசாரத்தை வளப்படுத்துதல், கலாசாரப் பரிமாற்றம், மக்களிடையே பரஸ்பரப் புரிதல், ஒத்துழைப்பையும் அமைதியையும் மேம்படுத்துதல், அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் மே 18-இல் உலக அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள சுமார் 1 லட்சம் அருங்காட்சியகங்களில் கண்காட்சிகள், பயிலரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முக்கிய அருங்காட்சியகங்கள் சிலவற்றை அறிவோம்.

சென்னை அரசு அருங்காட்சியகம்: சென்னை எழும்பூரில் 1851-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகத்தில் சிற்பங்கள், தொல்லியல், நாணயவியல், இயற்கை அறிவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை அருங்காட்சியகம், வேலூர் கோட்டை அருங்காட்சியகம், கரூர் தொல்லியல் அருங்காட்சியகம், தஞ்சை கலைக்கூடம் உள்ளிட்டவற்றிலும் அரிய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

சாமான்யர்களின் வலியை நீதித் துறை தீர்க்க வேண்டும்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

time to read

1 min

May 17, 2026

Dinamani Tenkasi

அதிமுக விவகாரத்தில் உரிய நேரத்தில் முடிவு

பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர்

time to read

1 min

May 17, 2026

Dinamani Tenkasi

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tenkasi

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tenkasi

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tenkasi

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tenkasi

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tenkasi

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Tenkasi

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size