Denemek ALTIN - Özgür
உயர் கல்வியில் முந்தும் இந்தியா!
Dinamani Tenkasi
|July 05, 2025
உயர் கல்வியின் வெற்றி, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் கல்வியின் தரத்தையும், மாணவர்களின் திறனையும் பொருத்தே அமைகிறது. மாணவர்களுக்கு உண்மைத்தன்மையும், படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய வளரும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இதனால், அந்த நாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் சென்றவர்களும், வாழ்வாதாரங்களுக்காக சென்றவர்களும் உயிருக்கு அச்சமின்றி, தங்கள் உடைமைகளை இழந்து பெரும் பயத்துடனும், கவலைகளுடனும் தங்களின் தாய் நாடு திரும்பி வருகின்றனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயர் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. தன் திறமைகளை உணர்ந்து, அதை மெருகேற்றி, குடத்தில் இருக்கிற விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காய், தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒருவருக்கு உயர் கல்வி அவசியமாகிறது. தான் சார்ந்த துறையில் யாரும் தொடாத உயரத்தைத் தொட்டு முன்மாதிரியாக விளங்கும் வழிகாட்டும் வாழ்க்கை அமைய சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்கின்றனர்.
உக்ரைன் - ரஷியா இடையே 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய போரின் போது அங்கு உயர் கல்வி பயின்ற வந்த மாணவர்கள் சுமார் 14,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பெரும் முயற்சிக்குப் பிறகு இந்தியா அழைத்துவரப்பட்டனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பு போர் காரணமாக இஸ்ரேலில் 1,200-லிருந்து 1500 மருத்துவ மாணவர்களும், இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 1,500-லிருந்து 2,000 மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம், அங்கு மருத்துவப் படிப்புகளுக்கு எளிதாக இடம் கிடைப்பதுடன், இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவேயாகும்.
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும், சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இது பாரீஸ் நகரத்தில் வாழும் மக்களைவிட மிகவும் அதிகம்.
சுமார் 90,000 மருத்துவ இடங்களுக்கு சுமார் 12 லட்சம் பேர் தகுதி பெறுகின்றனர். இதில் தனியார் கல்லூரிகளில் சுமார் 20,000 மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஒதுக்கீடு ஆகியனவும் அடங்கும். இதனால், லட்சக்கணக்கானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பண வசதியின்றி எங்கும் சேர முடியாத காரணத்தால், அவர்கள் உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பைப் படிக்கின்றனர்.
Bu hikaye Dinamani Tenkasi dergisinin July 05, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tenkasi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tenkasi
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Dinamani Tenkasi
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Tenkasi
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Tenkasi
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Translate
Change font size
