Denemek ALTIN - Özgür
சிறப்பு தீவிர திருத்தம் எனும் தேர்தல் பதற்றம்
Dinamani Pudukkottai
|August 14, 2025
சிறப்பு தீவிர திருத்தம் என்பது குழப்பத்தையும், மோசமான சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படாதவரை குற்றவாளிகள் என்று பிகார் வாக்காளர்கள் கருதப்படுகிறார்கள். இது தவறான முன்னுதாரணமாக மட்டுமல்லாது சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறுகிறது.
காரில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்தம் என்பது ஜனநாயகம், சட்டத்தின் அடிப்படையிலான உலகளாவிய வாக்குரிமை முறையை மறுகட்டமைப்பதாகவே அமைகிறது. இந்த இயந்திரத்தனமான வாக்குரிமைப் பறிப்பு, நாட்டின் அதிகார மையம் நேர்மையாக செயல்படுவதாக வேடமிட்டுள்ளதையும், அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவதையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 326 ஆகும். அது சற்று தெளிவற்றதாகவும், சில கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் அமைகிறது. தேர்தல்களில் வாக்களிக்க இந்திய குடிமகனாகவும் 18 வயதுக்கு குறையாதவராகவும் இருக்க வேண்டும். மனநிலை சரியில்லாதவர், குற்ற நடவடிக்கைகள், ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உரிய சட்டங்களின்படி தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய உரிமை உண்டு.
இதில் 'வாக்காளராக பதிவு செய்ய உரிமை உண்டு' என்ற சொல், ஒரு தவிர்க்க முடியாத அரசமைப்பு உரிமையை உருவாக்கியுள்ளதுடன், வாக்களிக்கும் தகுதியை மறுக்கும் பொறுப்பை அரசுக்கு அளித்துள்ளது. இந்தப் பொறுப்பு உருவாக்கம் நான்கு மாறாத கொள்கைகளை உறுதிப்படுத்துகிறது. முதலாவதாக, வாக்குரிமை என்பது குடியுரிமையின் இயல்பாகவே அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தகுதி.
இரண்டாவது வாக்களிப்பதற்கான தகுதியிழப்புகள் குறித்தானது. இதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டால், குறிப்பிடப்படாத மற்ற விஷயங்கள் விலக்கப்பட வேண்டியவை என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மூன்றாவதாக ஒவ்வொரு தகுதியிழப்புக்கும் நீதித் துறை ஒப்புதல் தேவைப்படுகிறது. நீதிமன்ற அறிவிப்புகளின்படி மன நிலை சரியில்லாதவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சட்டப்பேரவையால் தகுதி நீக்கப்பட்டவர் அல்லது அரசின் பிற நிர்வாக அமைப்புகளால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கவில்லை என்று அறிவிக்கப்படுவது. இவை தவிர, பிற வேறு எந்த அமைப்புகளும், விதிகளும் யாருடைய வாக்குரிமையையும் தகுதிநீக்கம் செய்ய முடியாது.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin August 14, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு
உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
June 06, 2026
Dinamani Pudukkottai
இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.
1 min
June 05, 2026
Translate
Change font size
