Denemek ALTIN - Özgür
தேவை அரசியல் விழிப்புணர்வு!
Dinamani Pudukkottai
|August 09, 2025
நல்லவர்கள் என்று கூறிக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்து புலம்புவதால் நாம் நல்லவர்கள் அல்ல. நல்லது செய்வோருடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லோரின் செயல். தனித்திருந்து நாம் நல்லவர் என்று கூறுவது தவறு செய்கிறவர்களுக்கு ஊக்கமளிக்கிறோம் என்பதே பொருள்.
பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை மாணவி ஒருவர் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார். 'நான் இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்து தற்போது முதுநிலை அரசியல் அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார். அப்போது, ஓர் இளைஞர் "இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்துவிட்டு ஏன் அரசியல் அறிவியல் முதுநிலை படிக்க வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி கூறிய பதில் வகுப்பு எடுக்கச் சென்ற என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.
இன்று நம் நாட்டில் தேநீர்க் கடையில் விவாதிக்கும் அரசியலைத்தான் அரசியலாகவே மக்கள் எண்ணுகிறார்கள். அப்படித்தான் எங்கும் பொறுப்பற்ற தன்மையில் பொறுப்புமிக்க தலைமைப்பதவியில் இருப்பவர்களும், நம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும்கூட நடந்து கொள்கிறார்கள். இந்த நாட்டையும், மக்களையும் மையப்படுத்தி செயல்படுவதற்குப் பதிலாக, தன்னையும் தன் கட்சியையும் மையப்படுத்துகின்றனர்.
அரசியல் என்பது ஓர் அறிவியல். அறிவியல் என்றால் உண்மை; உண்மையுடன் இருந்தால்தான் அது அறிவியல். அந்த அறிவியலைப் படித்து மக்களிடம் அரசியல் அறிவியலை எடுத்துச் சென்று மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால், இந்த நாட்டில் நல் அரசியலை-அற அரசியலை நம்மால் உருவாக்க முடியும். ஆகவேதான், இந்தப் படிப்பை நான் எனக்காகப் படிக்கவில்லை; இந்த சமூக அவலங்களைப் போக்கப் படிக்கிறேன்' என்றார்.
அந்த மாணவிக்கு இருந்த புரிதல், நாட்டுப்பற்று, சமூகப் பார்வை, பொறுப்பு நம் தலைவர்களிடம் இல்லையே; அவர் கூறிய பொறுப்பற்ற தன்மைக்கு நம் அரசியலில் பல உதாரணங்களைக் காட்டலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருள்களுக்கு புதிய வரிகளை விதித்தார். அதில் நம் அரசியல்வாதிகள் பொறுப்பற்று செயல்பட்ட விதத்தை நாம் அவர்களின் விவாதங்களில் கண்டோம். ஜப்பானுக்கும் டிரம்ப் இதையேதான் செய்தார். உடனே தன் நாட்டுப் பொருள்களின் விலையை ஜப்பான் குறைத்து விட்டது. பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஓசையின்றி உடனே முடிவெடுத்துவிட்டனர்.
Bu hikaye Dinamani Pudukkottai dergisinin August 09, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Pudukkottai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Pudukkottai
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Pudukkottai
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
முதல்வர் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு பதவி ரத்து
தமிழக முதல்வர் விஜய் யின் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Pudukkottai
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Translate
Change font size
