பூவுலகு எனும் நம் விமானம்
Dinamani Puducherry
|July 19, 2025
விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரம் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புகளும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.
பூமியை விட்டு வெளியே சென்று நமது உலகின் நிலைமையை அலசி ஆராய்ந்தார்கள் சில அறிஞர்கள். ஹென்றி ஜார்ஜ் என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் தனது 1879-ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் 'பூமி அனைத்துத் தேவைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு விண்வெளிக் கலம்' என்று குறிப்பிட்டார். அந்த உருவகத்தை ஜார்ஜ் ஆர்வெல் என்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் 1937-இல் வெளியிடப்பட்ட தன்வரலாற்று நூலில் எடுத்தாண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு தோற்றுப்போய் பின்னர் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராகப் பணியாற்றிய அட்லாய் ஸ்டீவன்சன் நமது பூமியை விண்கலம் என்று அழைத்து, அதன் மீது பயணம் செய்யும் பயணிகள் பாதி பேர் பாக்கியவான்களாகவும், பாதி பேர் தரித்திரர்களாகவும், பாதி பேர் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், பாதி பேர் பரிதவிப்பவர்களாகவும், பாதி பேர் அடிமைகளாகவும், பாதி பேர் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாதிரியான பெருத்த வேறுபாடுகளோடு எந்தக் கலமும், எந்தப் பயணி யும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாது. இதைக் களைவதன் மூலம்தான் நாம் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 1965-ஆம் ஆண்டு தனது ஐ.நா. உரை ஒன்றில் குறிப்பிட்டார்.
கென்னத் போல்டிங் என்கிற சமூகவியல் அறிஞர் 1966-ஆம் ஆண்டு 'முகிழ்க்கும் விண்வெளிக்கலமாம் பூமியின் பொருளாதாரம்' எனும் புகழ்பெற்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர், 1971-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த ஊ தாண்ட் தனது 'பூமி நாள்' உரையில் குளிரான விண்வெளியில் இதமான, மெல்லிதான உயிர்களுடன் சுழன்றும் சுற்றிக்கொண்டும் இருக்கும் நமது அழகான விண்கலமாம் பூமிக்கு சமாதானகரமான, மகிழ்ச்சியான பூமி நாள்கள் மட்டுமே வந்து சேரட்டும் என்று வாழ்த்தினார்.
சர்வதேச சமாதான ஆய்வுக் கழகத்தின் மாநாடுகளில் கென்னத் போல்டிங் மற்றும் அவரது துணைவியார் எலீஸ் போல்டிங் ஆகியோருடன் பலமுறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதெல்லாம் இந்த உருவகம் பற்றி நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம்.
நமது பூமியை ஒரு விமானமாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்த பூமியில் வாழும் ஏறத்தாழ 823 கோடி மனிதர்களையும் இந்த விமானத்தில் சேர்ந்து பயணம் செய்யும் பயணிகளாக உருவகம் செய்யுங்கள்.
Bu hikaye Dinamani Puducherry dergisinin July 19, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Puducherry
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Puducherry
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Puducherry
‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
January 03, 2026
Dinamani Puducherry
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Puducherry
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Puducherry
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Puducherry
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Puducherry
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Dinamani Puducherry
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Translate
Change font size
