Denemek ALTIN - Özgür
பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை
Dinamani Puducherry
|June 17, 2025
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலர் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜெர்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.
அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028-ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜெர்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயர்ந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலை கொண்டுவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.
இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளர்ச்சி தொடர்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளர்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளர்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
Bu hikaye Dinamani Puducherry dergisinin June 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!
இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு.
3 mins
January 23, 2026
Dinamani Puducherry
வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 23, 2026
Dinamani Puducherry
ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்: கே.அண்ணாமலை
தமிழகத்தின் மிக முக்கிய தலைவரான முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
January 23, 2026
Dinamani Puducherry
‘தனி சின்னத்தில் தமாகா போட்டியிடும்’
தனி சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
1 min
January 23, 2026
Dinamani Puducherry
WPL யுபியை வீழ்த்தியது குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.
1 min
January 23, 2026
Dinamani Puducherry
தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்
வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் இசிஐநெட் எனும் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தில்லி ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
1 min
January 23, 2026
Dinamani Puducherry
சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!
சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
2 mins
January 23, 2026
Dinamani Puducherry
நடப்பு சாம்பியன்கள் சின்னர், கீஸ் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் தங்களது பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
January 23, 2026
Dinamani Puducherry
வன விலங்குகளின் வாழ்விட உரிமை!
பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
2 mins
January 22, 2026
Dinamani Puducherry
பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: கேரள நபர் தற்கொலை சம்பவத்தில் பெண் யூடியூபர் கைது
கேரளத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதால் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அதுதொடர்பாக காணொலி பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பெண் யூடியூபரை காவல் துறை புதன்கிழமை கைது செய்தது.
1 min
January 22, 2026
Translate
Change font size

