Denemek ALTIN - Özgür
நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை!
Dinamani Puducherry
|June 09, 2025
இந்தியாவின் மொழி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தனது அரசுமுறைப் பயணத்தில் ஸ்பெயினில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவரும் மனம்கொள்ள வேண்டிய சொற்கள்.
மொழி என்பது மானுடத்தின் வரம். மனித சமூகத்தின் உயிர்நாடி. தகவல் பரிமாற்றத்துடன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சாதனமும் ஆகும். ஒரு இனத்தின் பண்பாடு, மரபுகள், பழக்கவழக்கங்கள், வரலாறு ஆகியவற்றைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் ஊடகமாக மொழி செயல்படுகிறது. மொழியை இழப்பது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்குச் சமம்.
அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானது. எந்த மொழியையும் கற்கலாம்; அதன் அழகை, இலக்கியங்களை ரசிக்கலாம். அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது. தனது மொழியின் பெருமைகளைப் பேசலாம். அதேநேரம் எந்த மொழியையும் விமர்சிக்கும் உரிமை எவருக்கும் இல்லை. தேசங்கள் தாண்டியோ அல்லது தேசத்திற்குள்ளோ உலகம் முழுமைக்கும் இது பொருந்தும்.
மொழி குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மொழியியல் அறிஞர்களின் இந்திய மொழிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில மொழிகளை செம்மொழி என வரையறுக்கின்றன. செம்மொழி குறித்த சிந்தனை இந்தியாவில் மட்டுமா? உலகின் மற்ற பகுதிகளிலும் இத்தகைய சிந்தனை உண்டா?
உலகில் கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், அரபி, ஹீப்ரு மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பின் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு மொழி செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். 1500 முதல் 2000 ஆண்டுகள் பழைமையானதாகவும், இலக்கிய வளம் மிக்கதாகவும், இலக்கணச் செழுமை கொண்டதாகவும் இருக்க வேண்டும். அந்த மொழியின் இலக்கியப் படைப்புகள் வேறு எந்த மொழியின் தழுவலாகவும் இல்லாமல் தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்படியான மொழியே செம்மொழி. செம்மொழி, காலந்தோறும் புதிய இலக்கியப் படைப்புகளை, சிந்தனைகளை உருவாக்குவதற்கான வளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
Bu hikaye Dinamani Puducherry dergisinin June 09, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு
திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
ஆட்சியில் பங்கு சாத்தியம்
ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Puducherry
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Puducherry
புதிய சிக்கலில் வங்கதேச உறவு!
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.
2 mins
January 06, 2026
Translate
Change font size
