Facebook Pixel பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு | Dinamani New Delhi - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு

Dinamani New Delhi

|

August 24, 2025

பல்வேறு மாநிலங்களில் மழை-வெள்ளம்

பூர்னியா, ஆக. 23: பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூர்னியா மாவட்டத்தின் கஸ்பா பகுதியில் உள்ள கரிகோசி ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நேரிட்டது. ஒன்பது வயது சிறுமி கௌரி குமாரி வழுக்கி விழுந்து, ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவரது அத்தை சுலோச்சனா தேவி (30), சிறுமியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார்.

இருவரையும் காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து ஆற்றில் குதித்த மற்ற குடும்ப உறுப்பினர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் சேகர் குமார் (21), கரண் குமார் (21) மற்றும் சச்சின் குமார் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அன்ஷுல் குமார் தெரிவித்தார்.

ஜார்க்கண்டில்... பலத்த மழை காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; ஒருவரை காணவில்லை. செராய் கேலா-கர்சவான் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் தாய்-மகன் இறந்தனர். அதே மாவட்டத்தில், சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். சத்ராவில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு தம்பதி அடித்துச் செல்லப்பட்டனர். இதில் கணவரின் உடல் மீட்கப்பட்டது. மனைவியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் திங்கள்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே தொடர் மழையால் மாநிலம் முழுவதும் பரவலாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன. வீடுகள் சேதமடைந்தன.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஸ்வர்ணரேகா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. தன. சாலைகள் மற்றும் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ரியாசி, கதுவா மாவட்டங்களில் மழை தொடர்பான இரு அசம்பாவித சம்பவங்களில் 2 பேர் உயிரிழந்தனர்.

Dinamani New Delhi'den DAHA FAZLA HİKAYE

Dinamani New Delhi

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani New Delhi

களைக்கொல்லி ரசாயனம் அனுமதியின்றி விற்பனை: அமேசானுக்கு எதிராக விசாரணை

வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை கொல்லும் ரசாயனம் என்ற பெயரில், முறைப்படி பதிவு செய்யப்படாத சைக்ளோசைனன் களைக்கொல்லியை விற்பனை செய்தது குறித்து, அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ, ஜியோமார்ட் ஆகிய இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani New Delhi

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani New Delhi

'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani New Delhi

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அகத்துறையாலும் அரசனுக்கு அறிவுரை

சங்க காலத்தில் அரசன் தவறு செய்தபோது புலவர்கள் மன்னனுக்கு அறிவுரை வழங்கித் திருத்தினார்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani New Delhi

தேர்தல் தோல்வி: ஆய்வுக் குழுவிடம் என் மீதும் புகார் அளிக்கலாம்

மு.க. ஸ்டாலின்

time to read

1 min

May 17, 2026

Dinamani New Delhi

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani New Delhi

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size