Facebook Pixel நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! | Dinamani Madurai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

Dinamani Madurai

|

June 20, 2026

உலகம் அளப்பரிய அற்புதங்களைக் கொண்டது. பாரதத்தில் அத்தகு அற்புதங்களை சித்தர்களும் முனிவர்களும் தவவலிமையால் உணர்ந்து சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வரையறை செய்து அளித்தனர்.

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வேதம், தத்துவம், மருத்துவம், யோகக்கலை எனப் பொக்கிஷங்களை எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகத் தந்தனர்.

அத்தகைய துறைகளுள் யோகக்கலை சிறப்புடையது. நாள் முழுவதும் சோர்வின்றி உழைப்பதற்கான உற்சாகமும் புத்துணர்வும் யோகப் பயிற்சியின் மூலம் கிடைக்கிறது. இன்றைய மாறிவரும் சூழலில் யோகக் கலை அவசியம் என்பதை உலகுக்கு நினைவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகின் கைகளில் சேர்த்த பெருமை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்.

பாரதத்தின் தனிச் சிறப்பு உலகையே ஒற்றைக் கிராமமாகவும் உயிர்கள் அனைத்தையும் சகோதரர்களாகவும் காணும் மாண்பாகும். அதனடிப்படையில், 'எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்' என்ற மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் முயற்சியாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐ.நா. சபையில் யோகக் கலையின் அவசியத்தையும், சர்வதேச யோகா தினம் வேண்டும் என்பதையும் முன்மொழிந்தார்கள். இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

டிசம்பர் 11, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் என அறிவித்தது. முதல்முறையாக யோகா தினம் ஜூன் 21, 2015 அன்று கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பொதுவெளிகளில் ஒன்றிணைந்து யோகப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் யோகக் கலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

பாரதத்தில் பள்ளிகளில் வாரந்தோறும் ஒரு பாடவேளை யோகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு யோகாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த கருப்பொருளுடன் யோகா தினம் நம் தேசத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். உலகம் கவனத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் யோகக் கலையின் அவசியம் குறித்த புரிதலும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

Dinamani Madurai

மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சி!

\"அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர் ஈடுபடவேண்டும்” என்கிறார் முனைவர் தி.ராமசாமி.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Madurai

மாடுகள் பலியிட கட்டுப்பாடு: திருத்தி அமைக்க மமக வலியுறுத்தல்

பக்ரீத் பண்டிகையின்போது மாடுகள் பலியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதைதிருத்தி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவையில் மனித நேய மக்கள் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்ததையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Madurai

டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்தது நியாயமானதே. அளவுக்கு மீறிய நடவடிக்கை அல்ல' என்று தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 mins

June 20, 2026

Dinamani Madurai

ஆண்களின் மலட்டுத்தன்மையை குறைக்கும் யோகா: எய்ம்ஸ்

ஆண்களின் மலட்டுத்தன்மையை யோகா குறைக்கும் என்று எய்ம்ஸ் ஆய்வாளர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சட்டம்-ஒழுங்கை காக்க என்ன நடவடிக்கைகள்?

தமிழகத்தில் போதைப் பொருள்கள், பாலியல் குற்றங்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பட்டியலிட்டார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

உலகம் அளப்பரிய அற்புதங்களைக் கொண்டது. பாரதத்தில் அத்தகு அற்புதங்களை சித்தர்களும் முனிவர்களும் தவவலிமையால் உணர்ந்து சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வரையறை செய்து அளித்தனர்.

time to read

3 mins

June 20, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்

தன் மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சிவசேனை (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

time to read

1 min

June 20, 2026

Dinamani Madurai

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size