The Perfect Holiday Gift Gift Now

தொழில் முதலீடுகள்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Dinamani Madurai

|

September 02, 2025

எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், செப். 1: தமிழகத்துக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே திங்கள்கிழமை மாலை எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தற்போது வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர், அங்கிருந்து புதிய முதலீடுகளை ஈட்டி வர வேண்டும். முதல்வர் நான்கு முறை வெளிநாடு பயணம் மேற்கொண்ட நிலையில், தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. இதுவரை எவ்வளவு தொழில் முதலீடுகள் ஈட்டி வரப்பட்டன, எவ்வளவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இவற்றின் மூலம், எவ்வளவு பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கடந்த 31-ஆம் தேதி டிஜிபி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏற்கெனவே 8 பேர் இருக்கும் நிலையில், 9 ஆவதாக இருக்கக்கூடியவரை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது.

ஏற்கெனவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே டிஜிபி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் மூலம் வீடு வீடாகச் சென்று 46 பிரச்னைகள் குறித்து துண்டுச் சீட்டுகள் கொடுக்கின்றனர். மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாகக் கண்டுபிடித்ததே முதல்வரின் நான்காண்டு கால சாதனையாகும்.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

Dinamani Madurai

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Madurai

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Madurai

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Madurai

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை

கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Madurai

தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Madurai

புதிய வருமான வரிச் சட்டத்துக்கு தயாராகுங்கள்: அதிகாரிகளுக்கு நேரடி வரிகள் வாரியத் தலைவர் அறிவுறுத்தல்

புதிய வருமான வரிச் சட்டத்துக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தயாராக வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவர் ரவி அகர்வால் அறிவுறுத்தினார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

Dinamani Madurai

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Madurai

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size