Denemek ALTIN - Özgür
சமூக ஒற்றுமையும் அரசமைப்பு சாசனமும்...
Dinamani Madurai
|July 14, 2025
அரசுகள் கொண்டுவரும் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் பலன்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதை அரசுகள் ஒப்புக்கொள்கின்றன. ஆனால், அதற்கான மூலக் காரணத்தைத் தொட அரசுகள் மறுக்கின்றன.
அறிவார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் இன்று அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படை விழுமியங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கக் கொள்கை ஒன்றை உருவாக்குங்கள் என்பதுதான் அந்தக் கோரிக்கை. இவர்கள் அரசியல்வாதிகள் அல்லர்; இவர்கள் ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று பணியாற்றிய சமூக உணர்வாளர்கள்.
ஏன் இந்தக் கோரிக்கையை வைக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் காட்டும் காரணமும், ஆதாரமும் யாராலும் மறுக்க இயலாது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அதிகாரத்தைப் பிடிக்க நடத்தப்படும் போட்டியில் வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள நம் அரசியல் கட்சிகள் செய்யும் செயல்கள் சமூக ஒற்றுமையைத் தகர்த்துக் கொண்டே வருகின்றன. அதுமட்டுமல்ல சமூகப் பிணக்குகளும், வன்முறையும் அதிகரித்து வருகின்றன.
சமூகப் பிணக்கும், சமூகப் பிரிவினைகளும், எல்லையில்லா ஏற்றத்தாழ்வுகளும், வன்முறையும் மக்களாட்சிக்கு எதிரான கூறுகள். இவை அனைத்தும் ஒரு நாட்டில் செயல்பட்டால் மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கொண்டு சேர்க்க இயலாது.
இந்தியாவில் 146 கோடி மக்களில் 82 கோடி மக்கள் தங்கள் உணவுப் பாதுகாப்புக்குப் பொது விநியோகத் திட்டத்தில் கிடைக்கும் விலையில்லா உணவுப் பொருள்களை நம்பி இருப்பதும், 42 கோடி மக்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இன்றி வாழ்வதும் இதன் விளைவுகள் தான்; இதைத்தான் உலக வங்கி நம்மைச் சரி செய்யக்கூறி அறிவுறுத்துகிறது. இந்தச் சூழல் மக்களாட்சிக்கும் நல்லதல்ல; சமூக ஒற்றுமை, அமைதி, மேம்பாடு இவற்றுக்கும் உகந்தது அல்ல.
இந்தச் சூழலை இனிமேலும் நாம் அனுமதித்தால் மக்களை நம் அரசியல் ஆளுகைச் செயல்பாட்டால் வன்முறைக்குள் தள்ளுகிறோம் என்பதுதான் பொருள். இந்த நிலையில்தான், நம் அரசியல் கட்சியின் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அரசியலை முன்னெடுத்து, இந்திய மேம்பாட்டு வரலாற்றில் எந்தெந்த ஜாதிகள் மேம்பட்டிருக்கின்றன, எந்தெந்த ஜாதிகள் மேம்பட முடியவில்லை என்பதைக் கண்டறிய முயல்கின்றன.
Bu hikaye Dinamani Madurai dergisinin July 14, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Madurai
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Madurai
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Dinamani Madurai
நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Madurai
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Madurai
சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்
134 ரன்கள் முன்னிலை
1 mins
January 07, 2026
Dinamani Madurai
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Madurai
வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
1 mins
January 07, 2026
Dinamani Madurai
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Madurai
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Translate
Change font size
