Denemek ALTIN - Özgür
இடைவெளி குறைய வேண்டும் !
Dinamani Karur
|May 26, 2026
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
அரசியல் தெரிந்த அனைவருக்கும் இது வியப்பாக இருக்கிறது. இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாகிப் போனார்கள்.
பல தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை அந்தப் பகுதி மக்களே அறிந்திருக்கவில்லை. ஆனால், வெற்றி பெற்று விட்டார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு அதன் தலைவர் பரப்புரைக்கே செல்லவில்லை; செல்லவும் முடியவில்லை. ஆனாலும், நான்குமுனைப் போட்டியில் 108 இடங்களைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து விட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
ஆட்சியைப் பிடிக்க இன்னும் 10 இடங்கள் தேவை என்று ஆளுநர் கூறிய போது, மக்களின் அனுதாபமும், ஆதரவும் இருமடங்கானது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து அந்த இடைவெளியை இட்டு நிரப்பியது.
கடந்த 10.5.2026 அன்று சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 9 அமைச்சர்களுடன் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அதுவரை ஒவ்வொரு நாளும் அரசியல் நகர்வுகள் திகில் படம் பார்ப்பது போல் இருந்தது.
மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் என்று கூறப்படுகிறது. உலகம் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே யிருக்கிறது. மனிதர்களும் மாறிக் கொண்டே இருக்கின்றனர். இந்த மாற்றங்களே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் இல்லையென்றால் உலகம் அழிந்து போகும் என்று அறிவியல் கூறுகிறது.
அதுபோலவே மக்களாட்சியில் மாற்றமும் அமைகிறது. புதிய தலைமுறை இந்த மாற்றத்தை விரும்புகிறது என்கிறார்கள். கடந்த தலைமுறை போலவே இந்தத் தலைமுறையும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அரசியல் அறிவுடன் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும். கவர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் கவனமாக சிந்திக்க வேண்டும்.
இந்த நிலையில்தான் இப்போது தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்திருக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய் எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்து வாழ்த்து பெற்றார். இது பண்பாட்டின் அடையாளம்; அரசியல் நாகரிகத்தின் தொடர்ச்சி. 'மக்களாட்சி' என்பது மக்களுக்காக மக்களே ஆட்சி செய்வதாகும்.
Bu hikaye Dinamani Karur dergisinin May 26, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Karur
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Karur
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Karur
மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்
இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.
2 mins
May 26, 2026
Dinamani Karur
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 min
May 26, 2026
Dinamani Karur
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதல்வர் விஜய் உத்தரவு
மேக்கேதாட்டு அணை விவகாரம்
1 min
May 26, 2026
Dinamani Karur
இடைவெளி குறைய வேண்டும் !
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
3 mins
May 26, 2026
Dinamani Karur
முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
May 26, 2026
Dinamani Karur
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min
May 26, 2026
Dinamani Karur
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Dinamani Karur
பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
3 mins
May 26, 2026
Listen
Translate
Change font size

