Denemek ALTIN - Özgür
உடன்படாவிட்டால் உடன்போக்கு!
Dinamani Karur
|August 10, 2025
காதல் அடைவது உயிரியற்கை என்று கூறினார் புரட்சிக் கவிஞர். காதல் உயிர்த்தொடர்பு உடையதாக இருக்குமாயின் அதில் ஏமாற்றம், பிரிவு, மனமுறிவு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. வெறும் உடற்கவர்ச்சியில் பிறப்பதன்று உண்மைக் காதல்.
காதலுக்கு இடையூறுகள் வரும். அவற்றைக் காதலர்களின் வலிமைமிக்க உள்ளம் தாங்கி நிற்கும். உறவுக்குள்ள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பரம்பரை வழக்கம்; ஜாதி, செல்வத்தகுதி ஆகியவை காதலுக்குத் தடையாகிவிடுவதைக் காண்கிறோம். இவற்றை மீறி நிகழ்வதே காதலர் உடன்போக்கு. இந்தக் காதல் தடை மீறலாகிய உடன்போக்கைச் சங்க இலக்கியங்கள் மிக அழகாகச் சித்தரிக்கின்றன.
ஏரியில் மழைக்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்நிறைந்தது. ஏரி உடைத்துக் கொள்ளுமோ என்று கருதிய ஊரார் பல தடுப்புகளைச் சமைத்தனர்; ஆனாலும், ஒருநாள் இரவில் ஏரி உடைத்துக் கொண்டு வெள்ளமாய் நீர் வெளியேறி விட்டது. இதுவே ஓர் உருவகம். ஏரி உடைந்து வெள்ளம் வெளியேறுவதுபோல் காதலர் உடன்போக்கு மேற்கொள்கின்றனர்.
ஓர் ஆடவன், ஒரு குமரி என இருவரின் உள்ளத்தில் காதல் பூத்தது. மறைவடக்கமாக இருந்த காதல் ஊரார் சிலரின் பார்வையில் பட்டுவிட்டது. இந்தக் களவுச் செய்தி பெற்றோரை எட்டியது. 'மகளே! இனி நீ தினைக் கொல்லைக்குக் காவலுக்காகப் போக வேண்டாம்' என்று தடுத்து விட்டனர். தலைவன் இரவு காலங்களில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாமல் தோழியிடம் கவலை தெரிவித்தான். இச்சூழலிலேயே உடன்போக்குத் திட்டமிடப்பட்டது.
தலைவியின் உள்ளமெல்லாம் போராட்டம். எப்படித் துணிந்து போவது? பெற்று வளர்த்தவர்களையும் தோழியரையும் நிலையாகப் பிரிந்தே போவதா? பெற்றதாயும் செவிலியும் காலை எழுந்து என்னைப் படுக்கையில் காணாது தவிப்பார்களே! என்றெல்லாம் கலங்குகின்றாள். ஒரு வழியாகத் துணிந்து கருக்கல் கரையுமுன் புறப்பட்டு விடுகிறாள். தலைவனிடம் அவளை அடைக்கலப்படுத்துகிறாள் தோழி.
Bu hikaye Dinamani Karur dergisinin August 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Karur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Karur
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Karur
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 13, 2026
Dinamani Karur
பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Karur
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Dinamani Karur
ரோஹிங்கியாக்கள் இன அழிப்பு மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
1 min
January 13, 2026
Dinamani Karur
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை; அதற்கான தேவையும் ஏற்படவில்லை என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Karur
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Karur
அமெரிக்காவுடன் போரிடவும் தயார்: ஈரான்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார், தேவைப்பட்டால் போரிடவும் தயார் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
1 min
January 13, 2026
Dinamani Karur
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.
1 min
January 13, 2026
Dinamani Karur
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 26% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 13, 2026
Translate
Change font size
