Denemek ALTIN - Özgür
குற்றப் புலனாய்வில் ஏ.ஐ. தொழில்நுட்பம்
Dinamani Dharmapuri
|February 11, 2026
மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்குதல், பொருள்களைப் பறித்துக் கொள்ளுதல் போன்ற செயல்கள் நடந்துள்ளன.
தங்களின் உயிரையும், வாழ்க்கையையும் தற்காத்துக் கொள்வதற்காக, தீங்கு விளைவிக்கும் அத்தகைய செயல்களில் ஆதி மனிதர்கள் ஈடுபட்டனர். அவை அந்தக் காலத்தில் சட்ட மீறல்களாகவோ அல்லது குற்றச் செயல்களாகவோ கருதப்படவில்லை.நாடோடிகளாக வாழ்ந்த ஆதி மனிதர்கள், காலப்போக்கில் சிறு சிறு குழுக்களாகவும், பின்னர் சமுதாயமாகவும் ஒருங்கிணைந்து வாழத் தொடங்கினர். விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். சேமிப்பு, சொத்துரிமை போன்றவை சமுதாயத்தில் நிகழத் தொடங்கின. இதன் விளைவாக திருட்டு, நிலத்தகராறு, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் வன்முறை, சமுதாய கட்டமைப்பு மீறல்கள் போன்ற செயல்கள் சமுதாயத்தில் நிகழத் தொடங்கின.
அந்தச் செயல்கள் சமுதாயத்தில் தீங்கு விளைவிக்கும் செயல்களாக இருந்தாலும், அவற்றைக் 'குற்றம்' என்ற கண்ணோட்டத்தில் அணுகிய, சட்ட ரீதியான நடைமுறை அந்தக் காலத்தில் இல்லை. தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கு ஏற்ப உடல் உறுப்புகளைக் கழித்தல், சமுதாயத்தில் இருந்து வெளியேற்றுதல் உள்ளிட்ட சமூகக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வந்தன.
மனித சமுதாயத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்கேற்ப, குற்ற நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. குற்றங்களுக்கான காரணங்கள், நிகழ்த்தப்படும் முறைகள், குற்றங்களை எதிர்கொள்ளும் முறைகள் சமுதாயத்தில் காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்தன. மன்னர்களின் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில், குடிமக்களின் நலனில் மன்னர்கள் கவனம் செலுத்தினர். சமுதாயத்தில் நிலவிவந்த குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள் குறித்த விதிகள் வகுக்கப்பட்டன.
பண்டைய இந்தியாவில் திருட்டு, தாக்குதல், மோசடி, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்த விவரங்கள் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பழம்பெரும் நாகரிகம் எனக் கருதப்படும் பாபிலோனில் கி.மு. 18-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஹம்முராபி சட்டத்தில் பல்வேறு குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் குறித்த விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Bu hikaye Dinamani Dharmapuri dergisinin February 11, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dharmapuri
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
1 min
April 09, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவில் 125 புதிய விடுதிகள்: ஹில்டன்-ராயல் ஆர்க்கிட் ஒப்பந்தம்
உலகப் புகழ் பெற்ற நட்சத்திர விடுதி நிறுவனமான ஹில்டன், இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் ராயல் ஆர்க்கிட் விடுதி நிறுவனத்துடன் ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
April 09, 2026
Dinamani Dharmapuri
உண்மையான காங்கிரஸார் தவெக பக்கம் உள்ளனர்
தமிழக காங்கிரஸாரை திமுக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டாலும், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம்தான் உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறினார்.
1 mins
April 09, 2026
Dinamani Dharmapuri
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலர் சாய் குமார்
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 mins
April 09, 2026
Dinamani Dharmapuri
மது, கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர்கள்
இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை
1 min
April 09, 2026
Dinamani Dharmapuri
ஹூண்டாய் கார்கள் விலை மே மாதம் முதல் உயர்வு
இந்தியாவில் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார், தனது கார்களின் விலையை வரும் மே மாதம் முதல் ஒரு சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.
1 min
April 09, 2026
Dinamani Dharmapuri
டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஏப்.
1 min
April 09, 2026
Dinamani Dharmapuri
இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிர்காலம்: அதிபர் டிரம்ப்புடன் கோர் ஆலோசனை
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இந்திய-அமெரிக்க உறவின் வலுவான எதிர்காலம் குறித்து கலந்துரையாடியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
1 min
April 09, 2026
Dinamani Dharmapuri
மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்!
வரும் நாள்களில், இந்தியா முழுவதும் பண்டிகை காலம் களைகட்டும்.
1 mins
April 09, 2026
Dinamani Dharmapuri
திவ்யா, வைஷாலி இணை முன்னிலை
பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
1 min
April 09, 2026
Listen
Translate
Change font size
