Denemek ALTIN - Özgür

பயணங்கள் தரும் பாடம்

Dinamani Dharmapuri

|

June 24, 2025

திட்டமிட்ட பயணம்தான் என்றாலும் முன்கூட்டிக் கிளம்பாமல், கடைசி நேரம் வரை பொறுத்திருந்து பரபரத்துக் கிளம்புபவர்களால்தான் பயண நெருக்கடிகள் மிகுதி. சில மணித்துளிகளில் இழக்கும் நிதானம் பலகால இயல்பு வாழ்வைப் பாதிக்கும் என்பது தெரிந்தும் முந்தி விரைவது நவீன மூடத்தனம்.

- கிருங்கை சேதுபதி

எதற்கும் அவசரம்; எங்கும் பரபரப்பு; முண்டியடித்துக்கொண்டு முன்னேறும் வேகத்தில் உண்டாகும் நெரிசல். இவைகூடிப் படுத்தும்பாட்டை நினைத்தால் கவலையாக இருக்கிறது. கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்த போது, இவற்றின் சுவடுகள் ஏதுமின்றி, இயற்கையில் ஒன்றியவர்களாய் வெகுநிதானமாய் இருந்தவர்கள் நாம்தானா என்கிற ஐயப்பாடு எழுகிறது.

அப்போதைய தேவைக்கு வாங்கிய வாகனங்களே இப்போதைய நெரிசலுக்கும் பரபரப்பிற்கும் முக்கியக்காரணம்' என்கிறார்கள். பயணிகளின் எண்ணிக்கைக்கு நிகராக வாகனங்களின் எண்ணிக்கையும் மிகுந்திருக்கிறது. குறித்தநேரத்தில் இலக்கினை அடைந்துவிட்ட பிறகும்கூட, வந்த வாகனத்தை நிறுத்துதற்கு இடம் தேடுவது சிக்கலாகி விடுகிறது. நிறுத்த இடம் இன்றிக்கட்டிய இல்லங்களின் வாசல்களில் நிற் கும் வாகனங்களில் மோதாமல் தன் வாக னத்தைச் செலுத்திப் பாதையைக் கடக்கத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். தீர்மானம் இல்லாத திடீர்ப் பயணங்கள் தவிர்க்க முடியாதவை; அதற்காகத் தேவையில்லாத விரைவு நிச்சயம் தவிர்க்க வேண்டியது.

திட்டமிட்ட பயணம்தான் என்றாலும் முன்கூட்டிக் கிளம்பாமல், கடைசி நேரம் வரை பொறுத்திருந்து பரபரத்துக் கிளம்புபவர்களால்தான் பயண நெருக்கடிகள் மிகுதி. சில மணித்துளிகளில் இழக்கும் நிதானம் பலகால இயல்பு வாழ்வைப் பாதிக்கும் என்பது தெரிந்தும் முந்தி விரைவது நவீன மூடத்தனம்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென்று வேகத்தைக் கூட்டுவதும், படக்கென்று பிரேக் அடித்து நிறுத்துவதும், பரபரத்து முன்னேறுவதும் பின் வரும் பெருவாகனங்களை நிலைதடுமாறச் செய்வதோடு விபத்துகளையும் உண்டாக்குகின்றன. சில மணித்துளிகளில் முந்திச் செல்ல விரைந்து மோதிப் பிறகு, பல மணிநேரம் சண்டையிடுகிற மனிதர்களை எதில் சேர்ப்பது? சாலை, அனைவருக்கும் பொது; பாதுகாப்பான பயணம் அதைவிடவும் பொது அல்லவா?

முன்னால் எந்த வண்டி போகும்? எனக் கேட்போர்க்கு, எல்லா வண்டியும் முன்னாலதான் போகும் என்று பதில் சொல்லுகிற ஓட்டுநரின் குரலில் மெல்லிய நகைச்சுவை இழையோடி, அவரது இயந்திரத்தன்மையைப் போக்கும். எரிச்சலை வெளிக்காட்ட முடியாமல், சிரித்தபடி பேருந்து கிளம்பும் நேரத்தைக் கேட்பவர்களின் முகம் பரிதாபமாய்த் தெரியும். அவர்களுக்கு என்ன அவசரமோ?

Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size