Denemek ALTIN - Özgür
மீனவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்
Dinamani Cuddalore
|April 28, 2025
புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு
புதுச்சேரி, ஏப். 27: புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்எம்எஸ்ஒய்) 4 ஆண்டுக் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, காரைக்கால் மீனவர்களுக்கான இலங்கை கடற்படையின் தொல்லையும் முடிவுக்கு வரவுள்ளது.
புதுவை மாநிலம் புதுச்சேரி உள்ளிட்ட 4 கடல் பிராந்திய பகுதிகளைக் கொண்டது. இங்கு, சுமார் 1.30 லட்சம் மீனவர்கள் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் நேரடி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1960-ஆம் ஆண்டிலிருந்து தமிழகம், புதுவை பகுதி மீனவர்கள் இழுவை வலை மீன்பிடி முறையிலேயே தொழில் செய்து வருகின்றனர். ஆனால், இழுவை வலை மீன்பிடிப்பால் கடலில் பவளப்பாறைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மீன்வளமும் குறைந்துவிட்டது.
மீனவர்களிடையே மோதல்: அந்தந்த பகுதிகளில் மீன்வளம் குறைந்ததால் மீனவர்கள் அடுத்த கடல் பகுதிக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி பகுதியில் உள்ள 465 விசைப்படகு மீனவர்களில் பெரும்பாலானோர் சென்னை பழவேற்காடு பகுதிக்குச் சென்று மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதனால், புதுச்சேரி மீனவர்களுக்கும், பழவேற்காடு மீனவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படுகிறது. அத்துடன் புதுச்சேரி பகுதி கடலில் 3 நாட்டிகல் கடல் எல்லைக்குள்ளும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வருவதால், நாட்டுப்படகு மீனவர்களும் அதிருப்தியடைகின்றனர்.
இதனால், உள்ளூர் மீனவர்களுக்குள்ளும் மோதல் ஏற்படும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
Bu hikaye Dinamani Cuddalore dergisinin April 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Cuddalore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Cuddalore
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Dinamani Cuddalore
உலகக் கோப்பை ஷாட் கன்: நீரு, விவான் இணைக்கு வெண்கலம்
கஜகஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பை ஷாட் கன் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா, விவான் கபூர் இணை ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ரீகர்வ் மகளிர் அணிக்கு தங்கம்
சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய ரீகர்வ் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
May 10, 2026
Dinamani Cuddalore
அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
May 10, 2026
Translate
Change font size
