Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

வெண்பாவின் டெல்லி அப்பளம்

Periyar Pinju

|

April 2025

ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் தான் அந்தப் பொருட்காட்சி இருந்தது.

வெண்பாவின் டெல்லி அப்பளம்

ஒரு மாலை வேளையில் அப்பாவும் அம்மாவும் வெண்பாவை அங்கே கூட்டிப் போனார்கள். அவள் இப்போது தான் முதல் முறையாக ஒரு பொருட்காட்சிக்குப் போகிறாள். வாயில் முகப்பில் தோரணம் எல்லாம் கட்டி மிகவும் அழகாக இருந்தது. கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் மைதானமே ஜொலித்தது. பெரிய பெரிய ராட்டினங்கள் இருந்தன, அவ்வளவு பெரிய ராட்டினத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. கப்பல் போல், விமானம் போல் என விதவிதமாக இருந்தன. வெண்பா அங்கே இருந்த ஒரு டிராகன் ராட்டினத்திலும் குதிரை ராட்டினத்திலும் ஏறி மகிழ்ந்தாள்.

மேலும் அங்கே ஏராளமாய் பல்வேறு பொருள்கள் விற்கும் கடைகள் இருந்தன. அப்பா அவளுக்கு ஒரு யானை வடிவிலான உண்டியல் ஒன்றை வாங்கி கொடுத்தார். வெண்பா அதை ஆசையாக வாங்கிப் பத்திரமாகக் கையில் வைத்துக்கொண்டாள்.

"வெண்பா நீ பெரிய சைஸ் அப்பளம் பார்த்திருக்கியா?" அம்மா கேட்டபடி அவளை ஒரு டெல்லி அப்பள கடைக்குக் கூட்டிப்போனார். அங்கே பெரி...ய்ய்ய... அப்பளம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அவள் உணவு சாப்பிடும் தட்டை விட மிகவும் பெரிதாக இருந்த அந்த அப்பளத்தை வாயைப் பிளந்து, கண்களை விரித்து, கன்னங்களில் கை வைத்து வெண்பா ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

அப்பா வெண்பாவிற்கும் ஒன்று வாங்கினார். ஒரு சிறிய பேப்பரின் மேல் அந்த டெல்லி அப்பளத்தை வைத்து, அதன் மீது சிறிது மிளகாய்ப் பொடியைத் தூவி கடைக்காரர் அதை குட்டி வெண்பாவிடம் கொடுக்க, அப்பா அவளிடம் இருந்த யானை உண்டியலை வாங்கிக்கொண்டார்.

வெண்பா அந்த அப்பளத்தைத் தன் குட்டிக்கைகளால் சிறிய துண்டு பிட்டு அம்மா அப்பா இருவருக்கும் முதலில் ஊட்டி விட்டாள். பின்னர் அவளும் அதைச் சுவைத்தாள். மொறு மொறுவென இருந்த அந்த அப்பளம் வாய்க்குள் போட்டதும் அப்படியே கரைந்து தொண்டைக்குள் இறங்கியது. அதைச் சாப்பிட்டு முடித்த பிறகும் நீண்ட நேரத்திற்கு அதன் சுவை வெண்பாவின் நாவில் இருந்தது.

வீட்டிற்குப் போன பிறகும் வெண்பா அந்த டெல்லி அப்பளத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். "அப்பா அந்த அப்பளம் சுவையா இருந்தது. இன்னொரு அப்பளம் வாங்கித் தருவீர்களா?” என்றாள்.

"பொருட்காட்சி இன்னையோட முடிஞ்சு போச்சுடா. அடுத்த ஆண்டு தான் திரும்பி வரும். அப்ப கண்டிப்பா வாங்கித் தரேன்” என்றார் அப்பா.

Periyar Pinju'den DAHA FAZLA HİKAYE

Periyar  Pinju

Periyar Pinju

சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சி க்கனம் - தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வெண்பாவின் டெல்லி அப்பளம்

ஒரு குட்டி ஊரில் ஒரு குட்டி வெண்பா இருந்தாளாம். ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு பொருட்காட்சி நடைபெற்றது. ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மைதானத்தில் தான் அந்தப் பொருட்காட்சி இருந்தது.

time to read

3 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

சுற்றி வளைத்த காவல்துறை

திடீர் என துப்பாக்கியுடன் வந்த முரடர்களை ரங்குவின் உதவியோடு விரட்டி அடித்து விட்டோம் ஆனால்... இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்தித்தபடி திரும்பி வந்தார் காட்டுவாசி.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில் ஒருவர் எங்கேயும் இருக்கலாம்.

time to read

1 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

சுனிதாவும், வில்மோரும் பின்னே ஸ்பேஸ் எக்ஸும்

கோடையின் தாக்கத்தில், குளிரூட்டியைத் (A/C) தவிர்த்து, மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு விண்மீன்களை எண்ணுவது பலருக்குப் பிடித்த செயலாய் இருக்கும்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

பித்தா பிறைசூடி...? .நிலவில் மனிதன் காலடி?

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் அரசு, தன் தந்தை தாயன்பனிடம், “அப்பா.. எங்க வகுப்புக்கு வர்ர ஆசிரியருங்க என்னைப் போட்டுக் குழப்புறாங்கப்பா..” என்றான்.

time to read

1 min

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வரி வாலாட்டிக் குருவி (WHITE BROWED WAGTAIL)

இயற்கையில் உருவான உயிரினங்களில் கொண்ட பறவையினங்கள் கூர்மையான மிகவும் அழகானவை பறவைகள்.

time to read

3 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

அஞ்சல் பெட்டி

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும்.

time to read

1 min

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

‘கெத்து' சிம்சி!

சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித உதவி என்றாலும் சிம்சியிடம்தான் போய் நிற்பார்கள்.

time to read

2 mins

April 2025

Periyar  Pinju

Periyar Pinju

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள்

நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது வச்சு, மோட்டார் ஓட்டுறது, ரிப்பேர் பண்றது, பேட்டரியை வைச்சு எதையாவது செஞ்சு பார்க்கிறது, கெட்டுப் போன பொம்மைகளை எடுத்து செயல்பட வைக்கிறதுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி. வீட்டிலேயே உருவாக்கப்பட்ட சூப்பரான வாகனங்களைப் பற்றித் தான் இந்த இதழ்ல பார்க்கவிருக்கிறோம்.

time to read

1 min

April 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back